பொதுவாகவே பெண்களுக்கு வாழ்வில் இரட்டைக் குதிரை ஓட்டுவது என்பது அசால்ட்டான ஒரு விஷயமாகவே இருக்கிறது. வீட்டு வேலை வெளியில் வேலை குடும்ப கஷ்டம் குடும்ப பாரம்என பல பிரச்சனைகளை கடந்து ஓய்வின்றி ஒவ்வொரு நாளும் தங்கள் குடும்பத்திற்காக பல பெண்கள் மெழுகாய் உருகுகின்றனர். இவற்றையெல்லாம் கடந்து குறைந்த அளவிலான பெண்களே தங்கள் உடல் நலத்தை பாதுகாப்பதற்கான பயிற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர்.
மன உளைச்சலையும் உடல் அலைச்சலையும் போக்க சிலம்பம் ஓர் தீர்வு என களத்தில் இறங்கி மன உறுதியையும், உடல் வலிமையையும்மேம்படுத்தி புதியதோர் வாழ்வில் பயணித்து சிலம்பமாய் சுழன்று வருகின்றனர் தஞ்சையை சேர்ந்த குடும்ப தலைவிகள்.
தங்கள் பிள்ளைகளை சிலம்ப பயிற்சியில் சேர்க்க வந்த பெண்களிடம் சிலம்பத்தின் மகத்தான நன்மையை கூறி நம்பிக்கை நிறைந்த சொற்களால் ஒரு ஊக்க ஊசியையும் போட்டு விட்டு அவர்களையும் சிலம்பத்தில் திறம்பட வைக்க பயிற்சிகளை கொடுத்து.சிலம்ப மாராயபட்டைகள் வழங்கும் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களின் முன்னிலையில் கலந்து கொண்டு, தங்களின் பயிற்சியினை செய்து காண்பித்து, சிலம்பு ஆசான் ராஜேஷ் கண்ணாவிடம் இருந்து மஞ்சள் வண்ண பெல்ட் பெற்றுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.மேலும் மஞ்சள் பெல்ட் வரை பெற வைத்து புதியதோர் வாழ்வுக்கு ஆசானாக இருந்து வருகிறார்.. தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகெடமியில் பயிற்சியாளராக உள்ள சங்கீதா.
குடும்பத்திற்காக சுழன்று வந்த நிலையில் நம் உடல் நலத்தை பாதுகாக்கும் சிலம்பத்திலும் ஒரு கை தான் பார்ப்போமே என இறங்கி தற்போது அதன் மூலம் பெற்ற மன உறுதியால் மனதில் இருந்து அவர்கள் கூறுகையில், மகளிர் தினமான இன்று பெண்களுக்கு அவர்கள் சொல்ல வரும் டிப்ஸ் என்னவென்று தெரியுமா,பணக்கஷ்டம், மனக்கஷ்டம் இவற்றையெல்லாம் நினைத்து அதிலேயே மூழ்கி கிடந்து உடலையும் வீணாக்காமல் அதிலிருந்து வெளியே வர சிலம்பம் போன்ற உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வெளியே வாருங்கள் என அழைப்பு விடுக்கின்றனர் இந்த குடும்பத் தலைவிகள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உடல் பயிற்சிக்காக செய்ய துணிந்த சிலம்பத்தால் தற்போது அடுத்தடுத்து வரும் சிலம்ப போட்டிகளில்பங்கேற்று பல பெல்டுகளையும் குவிக்கப் போகிறோம் என்பதே இப்பெண்களின் எதிர்கால கனவாக மாறியிருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.