ஹோம் /தஞ்சாவூர் /

வெளிநாட்டு வேலை வேணாம்.. விவசாயமே போதும்.. தஞ்சையில் முழு நேர விவசாயியாக மாறிய பொறியியல் பட்டதாரி!

வெளிநாட்டு வேலை வேணாம்.. விவசாயமே போதும்.. தஞ்சையில் முழு நேர விவசாயியாக மாறிய பொறியியல் பட்டதாரி!

X
தஞ்சை

தஞ்சை விவசாயி

Tanjore District News : தஞ்சையை சேர்ந்த இளைஞர் பொறியியல் படிப்பை முடித்து விட்டு தற்போது சம்பங்கி பூ சாகுபடியில் இறங்கி நல்ல லாபம் பெற்று வருகிறார்.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் திருக்கானூர்பட்டி அருகே உள்ள‌ குருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் பொறியியல் படிப்பை முடித்த நிலையில் கடந்த 3 மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா காலத்தில் மீண்டும் வெளிநாட்டிற்கு போக முடியவில்லை. படித்ததற்கு ஏற்ற வேலையும் கிடைக்கவில்லை. தொடக்கத்திலேயே விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு 5 ஏக்கரில் சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது.

இவரின் பெற்றோர்கள் கடந்த 10 ஆண்டுகளாக சம்பங்கி பூ சாகுபடி, விவசாயத்தில் பல சாகுபடிகளைசெய்து வந்த நிலையில் தற்போது போதிய வேலை இல்லாததால் சம்பங்கி பூ சாகுபடியில் இந்த இளைஞர் களம் இறங்கி முழு நேர விவசாயியாக மாறியுள்ளார்.

இதையும் படிங்க : தஞ்சை பெரிய கோயிலில் கார்த்திகைக்காக எரிக்கப்பட்ட சொக்கப்பனை

இரண்டு ஏக்கரில் சம்பங்கி பூ, இரண்டு ஏக்கரில் தேக்கு, ஒரு ஏக்கரில் சோளம் என ஐந்து ஏக்கர் நிலத்தையும் தனி ஆளாகவே இருந்து பெற்றோருக்கு பெரிதளவிலா வேலை கொடுக்காமல் கொஞ்சம் ஓய்வு கொடுத்து சுழன்று வருகிறார் இந்த இளைஞர்.

சம்பங்கி பூ சாகுபடி :

சம்பங்கி பூ சாகுபடி பொருத்தவரையில் தெற்கு மாவட்டங்களில் விளைச்சல் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், விளையும்நேரத்தில் கிடைக்கும் பூக்கள் நல்ல லாபத்தை தருகிறது. தின வருமானமாகவும் இருக்கிறது.

மழைக்காலங்களில் இந்த சம்பங்கி பூ சாகுபடியில் பூக்களின் விளைச்சல் குறைவாக இருந்தாலும் அதிக தேவை இருப்பதால் அதற்கேற்ற அதிக விலையும் கிடைக்கிறது. எனவே நம்பிக்கையுடன் இந்த சம்பங்கி பூ சாகுபடியில் செய்யலாம்.

இந்த இளைஞரை பொறுத்தவரையில் இரண்டு ஏக்கரில் சம்பங்கி பூ சாகுபடி செய்து வருகிறார். ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20 கிலோவும் அதிகபட்சமாக 60 கிலோ பூ வரை கிடைக்கிறது.

ஒரு கிலோ பூவின் தற்போதைய விலை 60 ரூபாய்க்கு செல்லும் நிலையில் அதிக பட்சமாக இரண்டு ஏக்கரில் ஒரு நாளைக்கு ஒரு ஏக்கரில் 3,000 ரூபாய் லாபம் பார்த்து வருகிறார். ஒவ்வொரு நாளும் அறுவடை அதிகமாக இருந்தால் இதைவிட அதிகமாகவும் குறைவாக இருந்தால் இதைவிட குறைவாகவும் வருமானம் கிடைக்கிறது.

பூச்சிகள் தாக்குதலின் போது அறுவடையில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஒரு சாகுபடி தோட்டக்கலையின் மூலம் அறிவுத்தலின்படியே செய்து வருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து இந்த இளைஞர் ஒரு கூறுகையில், ‘மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டில் தான் வேலை பார்த்து வந்தேன். கொரோனா காரணத்தினால் ஊருக்கு வந்து திரும்பவும் போக முடியவில்லை. பொறியியல் படித்தேன்.

அதற்கேற்ற வேலையும் இங்கு கிடைக்கவில்லை. வேலைக்காக சில இடங்களில் தேடி அலைந்தேன். வேலை இல்லாததால், கடைசி வரைக்கும் நமக்கு கை கொடுப்பது விவசாயம் தான் என்று தோன்றியது. அதன்படி வீட்டில் இருப்பவர்களிடம் எடுத்துக் கூறினேன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பின்பு முழு நேர விவசாய மாறியுள்ளேன்.பிற்காலத்தில் வெளிநாட்டில் போவதற்கான வாய்ப்பு கிடைத்தாலும் செல்வேன். ஆனால் அதுஎனக்கு நிரந்தரம் இல்லை. விவசாயம் தான் நிரந்தரம்' என கூறினார்.

First published:

Tags: Agriculture, Local News, Tanjore