முகப்பு /தஞ்சாவூர் /

ஏ4 தாளில் 135 கோவில்களை வரைந்து உலக சாதனையில் இடம் பிடித்த தஞ்சை கல்லூரி மாணவி!

ஏ4 தாளில் 135 கோவில்களை வரைந்து உலக சாதனையில் இடம் பிடித்த தஞ்சை கல்லூரி மாணவி!

X
உலக

உலக சாதனையில் இடம் பிடித்த தஞ்சை கல்லூரி மாணவி

Thanjavur District News | தஞ்சாவூரை சேர்ந்த கல்லூரி மாணவி  A4 தாளில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான 135 கோவில்களை 3 மணி நேரத்தில் வரைந்து  உலக சாதனை பட்டியில் இடம்பிடித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை அடுத்த வல்லம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி யமுனா, தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு ஃபேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். இவர் சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதை வழக்கமாக்கி வந்துள்ளார். வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று சிறுவயதிலிருந்தே தோன்றிய ஆசையால் தற்போது ஏ4 தாளில் தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த 135 கோவில்களை வரைந்து சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்டில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

இந்த ஒரு சாதனை நிகழ்வை, மகளிர் தினத்தன்று இவர் படித்து வரும் கல்லூரியில் சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் பதக்கங்களையும், சான்றுகளையும் கொடுத்து சிறப்பித்துள்ளது. மேலும் சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளதால் மாணவி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஓவியம் மட்டுமல்லாமல் பேச்சுப்போட்டி, சிலம்பம் போன்ற பல்வேறு வகையான கலைகளில் கற்று தேர்ந்த இவர், அதன் மூலம் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும் குவித்துள்ளார்.

கலைத்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறீர்களே! உங்களுடைய லட்சியம் தான் என்ன? என்ற கேள்விக்கு உடனே எனக்கு விமானியாக ஆக வேண்டும் என்று சற்றும் எதிர்பாராத பதிலை மகிழ்ச்சியாக கூறினார் இந்த தன்னம்பிக்கை மாணவி. இப்போது படித்து வரும் ஃபேஷன்டெக்னாலஜியை முடித்துவிட்டு ஒரு நல்ல வேலைக்கு சென்று சம்பாதித்து அதன் பிறகு பெற்றோருக்கு சுமை கொடுக்காமல் விமானியாக வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : தஞ்சையில் முருகனுக்கு ஆறுபடை வீடு இருக்கு தெரியுமா?

படிப்பில் மட்டுமின்றி கலைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு, விமானியாக ஆக வேண்டும் என்ற லட்சியத்தையும் விடாமல் கடைப்பிடித்து சாதனை என்னும் கொடியை தொட ஒவ்வொரு படியாக எடுத்து வைத்து வரும் இந்த மாணவியை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்வோம்.

First published:

Tags: Local News, Thanjavur