தஞ்சையை சேர்ந்த காயத்ரி தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கலை கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் அக்கா, தம்பி விடுதியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவரின் அப்பா முருகானந்தம், அம்மா சரிதா இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சை பெரிய கோயில் மற்றும் தெற்கு வீதியில் இளநீர் கடை நடத்தி வருகின்றனர். மாணவி காயத்திரி வாழ்வில் மிகப்பெரிய வெற்றிகளை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி உழைத்து வருகிறார். அதன்படி க்ளாசிக்கல் டான்ஸில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் பரத நாட்டிய பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் காலையில் ஸ்போக்கன் இங்லீஷ் வகுப்பு, பிறகு கல்லூரி படிப்பு, கல்லூரியில் ப்ளேஸ்மென்ட் பயிற்சி, மாலையில் தஞ்சாவூர் வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் பரத நாட்டிய வகுப்பு முடித்து விட்டு அங்கேயே பகுதி நேர வேலை என வாரத்தில் 5 நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கும் நிலையில் இங்கு இவரின் பெற்றோர் இளநீர் வியாரத்தில் பிஸியாக இருக்கின்றனர். இதனால் வாரம் முழுவதும் தன் குடும்பத்திற்காக உழைக்கும் பெற்றோருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று சனி, ஞாயிறு விடுமுறை நாளில் 2 நாட்களும் காயத்ரி இளிநீர் கடையை கவனித்து வருகிறார்.
இதுகுறித்து பேசிய மாணவி காயத்ரி, “நான் 8ம் வகுப்பு படிக்கும்போதே இளநீர் வெட்ட தொடங்கினேன். பள்ளி படிப்பின்போது அவ்வப்போது பெற்றோருக்கு உதவி செய்து வந்தேன். தற்போது நான் கல்லூரி படித்து கொண்டிருந்தாலும், இளநீர் கடையில் நின்று வியாபாரம் செய்கிறோம் என்று ஒரு நாள் கூட நினைத்ததில்லை. என் குடும்ப சூழ்நிலைக்காக நான் இதை செய்கிறேன். இது எனக்கு ஒரு நாள் கூட சலிப்பை கொடுத்ததில்லை. என்னால் முடிந்த அளவுக்கு என் பெற்றோருக்கு 2 நாள் விடுமுறையில் உதவுகிறேன் என்பது எனக்கு திருப்தியை அளிக்கிறது.
நான் வியாபாரம் செய்யும்போது ஒரு நாளைக்கு ரூ.1000, ரூ.1500 வரை இளநீர் விற்பேன். என் பெற்றோர் ஒரு நாள் கூட கடையில் வந்து வியாபாரம் செய் என்று என்னிடம் கூறுவதில்லை. இதுபோன்று வியாபாரத்தில் ஈடுபட்டு வரும்போது ஒரு சில வாடிக்கையாளர்கள் உனக்கு என்ன உதவி வேண்டும். நான் செய்கிறேன் என்று கூட கேட்பார்கள். ஆனால் அதை எதையும் நான் விரும்ப மாட்டேன். சொந்த காலில் நின்று சொந்தக்காரவங்க முன்னாடி மிகப்பெரிய இடத்தில் நிற்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய குறிக்கோள். எனது பெற்றோருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், மிகப்பெரிய கிளாசிக்கல் டான்ஸராக வேண்டும். தற்போது வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். பயிற்சி மேற்கொள்வதற்கு போதுமான பண வசதி இல்லாததால் பாதியிலே நின்றேன். பின்னர் மாஸ்டர் ராஜேஷ் கண்ணாவின் உதவியால் தற்போது மீண்டும் பரதநாட்டிய பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur