Home /thanjavur /

இப்படிக்கூட ஒரு ஓட்டல் இருக்கா..!! ஆச்சரியப்படுத்தும் தஞ்சை செல்லம்மாள் மண்பானை உணவகம்..!!

இப்படிக்கூட ஒரு ஓட்டல் இருக்கா..!! ஆச்சரியப்படுத்தும் தஞ்சை செல்லம்மாள் மண்பானை உணவகம்..!!

தஞ்சை

தஞ்சை செல்லம்மாள் உணவகம்..!!

Thanjavur Chellammal Man Paanai Unavakam | மாடு பூட்டி செக்கில் ஆட்டிய எண்ணெய்.. மண்பானைகளில் மட்டுமே சமையல்.. காவிரி கரையில் விளைவித்த காய்கறி, கீரை வகைகள்.. மூலிகை சூப், A2 பால் லஸ்ஸி, பானகம், பாயாசம்னு 32 வகை ஆரோக்கிய விருந்து.. வாழ்நாள் அனுபவம் தரும் தஞ்சை செல்லம்மாள் உணவகம்..!!

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் மருத்துவ‌ கல்லூரி சாலையில் உள்ள கனபதி நகர் பகுதியில் அமைந்துள்ள செல்லம்மாள் மண்பானை உணவகத்தில், பாரம்பரிய முறையான மாடு பூட்டி செக்கு இழுத்து எண்ணெய் தயாரிப்பது மட்டுமல்லாமல் மண் பானையை கொண்டு சமைத்து, சமைத்தவர்களே பரிமாறும் உணவகமாக தஞ்சை மக்களிடையே பிரபலமாகி வருகிறது. இந்த  உணவகத்தின் ஆச்சரியமூட்டும் சிறப்புகளை விரிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

பாரம்பரிய விரும்பியான இந்த உணவகத்தின் நிறுவனர் செந்தில் ஆனந்த், கடந்த 2015 ஆண்டு வரை கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த இவர், உணவின் மேல் உள்ள அதீத காதலால் சில அனுபவங்கள் மூலமாக பாரம்பரிய முறையில் உணவகம் அமைத்து பல சவால்களை கடந்து வந்துள்ளார். தற்போது தஞ்சையில் சிறந்த சைவ உணவகங்களில் இவரின் உணவகம் தான் பிரபலம்.

தஞ்சை செல்லம்மாள் மண்பானை உணவகம்..!!


பாரம்பரிய உணவுகள்:

பாராம்பரிய உணவு என்பது மண் பானை, மற்றும் உணவில் சேர்க்கப்படும் ரசாயன மற்ற இடுபொருட்கள், மரச்செக்கில் தயாரிக்கும் எண்ணெய்களை கொண்டு சமைப்பதாகும்.

மண் பானைகளில் சமையல்


அந்த வகையில் உடலையும் உயிரையும் பேனும் ஒர் உயர்தர‌ உணவை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தஞ்சை குயவர்களிடம் சென்று மண் பானைளை பயன்படுத்தும் முறைகளை கேட்டு அறிந்து பின்பு பானைகளை வாங்கி, பிறகு நம் முன்னோர்கள் பயன்படுத்திய மாடு பூட்டி செக்கு இழுத்து எண்ணெய்களை தயாரிக்கும் நம் தமிழனின் தொழில்நுட்பத்தை அறிந்து அதை மீண்டும் பயண்படுத்தி , தன் வயலில் விளையும் கடலை,எள்ளுகளை கொண்டு ஆக சிறந்த எண்ணெய்களை தயாரித்து, தன் வயலில் விலையும் காய்கறிகளையும் பயன்படுத்தி கடந்த 4 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார்.

சமையலுக்கு பயன்படுத்த மாடு பூட்டி சொந்தமாக இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பு


உணவு வகைகள்:

காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் இவ்வுணவகம் செயல்பட்டு வருகிறது. மதியம்- கிராமத்து பொன்னி அரிசி சாதம், தினை வரகு, சாமை, சாதங்கள் கொண்ட 32 வகையான கூட்டு பொரியலுடன், சாம்பார்,வத்த குழம்பு,பருப்பு உருண்டை குழம்பு, ரசம் மோர், கீரை வகைகள், வடை, வாழைத்தண்டு, உற்சாக பானம், கீரை சூப், 4 விதமான துகையள் வகைகள், மூலிகை குடிநீர், நாட்டு பால் லஸ்ஸி, A2 நாட்டு பால் கொண்ட இனிப்பு வகைகள், தினை பாயாசம் போன்ற பல வகையான சைவ உணவுகள் 150- முதல் 270 வரை வழங்கப்பட்டு வருகிறது.

சைவ சாப்பாட்டை விரும்பி உண்ணும் வெளிநாட்டவர்


இரவில்- 4 விதமான அரிசி தினை இட்லி,தோசைகள் , கோதுமை புட்டு, ரவை, கோதுமை பரோட்டா, இடியாப்பம், எண்ணெய் இல்லாத சப்பாத்தி எண்ணெய் உள்ள சப்பாத்தி, போன்ற உணவுகள் வழங்கப்படுகிறது. இந்த உணவுகளை சமைத்தவர்களே பரிமாறுவது இவ்வுணவகத்தின் மற்றொரு சிறப்பாகும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் இது குறித்து உரிமையாளர் செந்தில் ஆனந்த் கூறுகையில்:

இந்த உணவத்தினை உடலையும் உயிரையும் பேனும் ஒர் உயர்தர‌ உணவகம் என நான் அடிக்கடி கூறுவேன், அது வெறு வார்த்தை மட்டுமல்ல என் அனுபவத்திலிருந்து கிடைத்த வார்த்தையாகும். மேலும் தற்போது தஞ்சையில் மட்டுமே செயல்பட்டு வரும் இந்த உணவத்தினை தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, ஆனால் முழு மனதோடு செயல்பட்டு எந்த ஒரு சுயநலமற்ற ஒரு தலைமை இருந்தால் இது நடக்கும் என்றும் கூறினார்.
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி