தஞ்சாவூர் பர்மா காலனியில் பர்மாவிலிருந்து வந்த நிறைய தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக கடை வைத்து நடத்தி வருகின்றனர். அதிலும் பர்மா காலனி அன்பு நகரில் இருக்கும் அக்கா கௌசா கடை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.
இந்த கௌசா கடை நடத்தும் ஜெயலட்சுமி என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக தஞ்சை பர்மா காலனியில் கடை நடத்தி வருகிறார்.
இவருடன் சின்னவேனி என்பவரும் இவருக்கு உதவியாக 14 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
இவர் தனது தேர்ந்த கைப்பக்குவத்தால் தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மூலம் தஞ்சை மக்களை தனது கௌசா கடைக்கு ஈர்த்துள்ளார். ஒரு நாளைக்கு சராசரியாக 150 முதல் 200 வாடிக்கையாளர்கள் இவரின் கடைக்கு வருகின்றனர்..

அக்கா கெளசா கடை..
எத்தனையோ கடைகள் இருந்தாலும் அக்கா கடை கௌசா, தஞ்சை உள்ளூர் மக்களிடையே பிரபலமாக திகழ்கிறது. வெஜ் கௌசா 50ரூக்கும், நான் - வெஜ் கௌசா 70 ரூ க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

அக்கா கெளசா கடை..
சென்னை போன்ற பல பகுதிகளில் இந்த உணவை அத்தோ என்றும் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. தஞ்சை பக்கம் வந்தா, அக்கா கடைக்கு மறக்காம ஒரு விசிட் அடிங்க...
தொடர்புக்கு:
அக்கா கௌசா கடை, பர்மா காலனி, அன்பு நகர், தஞ்சாவூர் தொலைபேசி எண்: 97516 25129
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அக்கா கெளசா கடையின் இருப்பிடத்தை அறிய.. க்ளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.