முகப்பு /தஞ்சாவூர் /

தேங்காய் ஓட்டில் கைவினை பொருட்கள்..! உலக நாடுகளை கவர்ந்த தஞ்சை கலைஞர்..!

தேங்காய் ஓட்டில் கைவினை பொருட்கள்..! உலக நாடுகளை கவர்ந்த தஞ்சை கலைஞர்..!

X
தேங்காய்

தேங்காய் ஓட்டில் கைவினை பொருட்கள் செய்து அசத்தும் கலைஞர்

Handicrafts in Coconut Shell : தேங்காய் ஓட்டில் கைவினை பொருட்களை செய்து காஷ்மீர் டூ கன்னியாகுமரி வரை விற்பனையில் அசத்தி  வரும் தஞ்சை கலைஞர். 

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கைவினை கலைஞர் குமரகுரு(61). இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டுள்ளார். அந்த ஆர்வத்தில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரியில் வணிக வரைகலை பயின்றுள்ளார்.

இவரது தந்தை நில அளவைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில், உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கருணை அடிப்படையில் குமரகுருவிற்கு அரசு வேலை கிடைத்துள்ளது. தொடர்ந்து, இவர் சுமார் 30 ஆண்டுகள் காலம் அரசு பணியைப் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் குமரகுருவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு வேலையில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று, தற்போது கைவினை தொழில் செய்து வருகிறார். அதாவது தேங்காய் மற்றும் தேங்காய் ஓடுகளை சந்தைகளில் தரம்பிரித்து வாங்கி, அவற்றை இயந்திரத்தின் மூலம் கட்டிங் செய்து, பின்னர் தேங்காய் ஓடுகளை பாலிஷ் செய்து, கைவினை கலை பொருட்களுக்குத் தேவையான பூ டிசைனை உருவாக்கி, அவரின் எண்ணத்திற்கு ஏற்ப கலை நயமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார்.

தேங்காய் ஓட்டில் கைவினை பொருட்கள் செய்து அசத்தும் கலைஞர்

மேலும் தேங்காய் ஓடுகளை மட்டுமே கொண்டு, அழகிய அலங்காரப்பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களான தேனீர் கப், ஜார், கரண்டி, பர்ஸ், கீ செயின் மற்றும் அலங்கார அணிகலன்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இதுவரை, இவருடைய கைவினைப் பொருட்கள் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளுக்கும் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : விழுப்புரத்தில் 1000 பேர் ஒரே நேரத்தில் மாவொளி சுற்றி சாதனை!

மத்திய அரசின் கைவினைக் கலைஞர் (தேங்காய் ஓடு கலைப்பொருட்கள்) என்ற அடையாளஅட்டையும் பெற்றுள்ளார். இவருடையகலைப் பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை முறையிலான பொருட்களை கொண்டு (தேங்காய் ஓடு, குச்சி) மட்டுமே, மேலும் மத்திய, மாநில அரசின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும் இவருடைய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் எந்த விதமான ரசாயன பூச்சும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சுமார் 700 நபர்களுக்கு கைவினை கலைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சியினையும் இவர் வழங்கி உள்ளார்.

இதுகுறித்து தொழில் முனைவோர் குமரகுரு என்பவர் கூறும்போது, “சிறுவயதில் இருந்து ஓவியத்தின் மேல் உள்ள அதீத ஆர்வத்தால் தான் இது சாத்தியமானது. ஆரம்பத்தில் வேலையை விட்டு விருப்ப ஓய்வு பெற்று வந்து, தேங்காய் ஓடுகளை கொண்டு கைவினைப் பொருட்கள் செய்ய தொடங்கிய போது பலர் இதற்கு பெரிய அளவில் இதற்கு வரவேற்பு கிடைக்காது.

சேல்ஸ் ஆகாது என்று பலர் நெகட்டிவான கருத்துக்களை சொன்னார்கள். ஆனால் என்னிடம் உள்ள தன்னம்பிக்கையும் ஆர்வத்தாலும் என்னை இதை செய்ய தூண்டியது. மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளேன்.

என்னிடம் பயிற்சி பெற்ற வருபவர்கள் ஒரு சில நாட்கள் இருந்து விட்டு செல்கின்றனர். ஆனால் கடைசி வரையில் இதில் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். அந்த ஆர்வமும் தோன்ற வேண்டும். மகளிர் சுய உதவி குழுவிடமும் பரிந்துரைத்தேன். ஆனால் பலர் இதை செய்வதற்கு முன்வரவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் வரும் நாட்களில் தேங்காய் ஓடுகளில் உருவப்படங்களும், ஓவியங்களும் வரைந்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும்” என்று கூறினார்.

First published:

Tags: Local News, Thanjavur