காதலர் தினம் நெருங்கி வருவதையொட்டி காதலர்களும், காதலிகளும் ரொமேண்டிக் இடத்த தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படியான காதலர்களுக்கான இடமாக அமைந்துள்ளது இந்த கஃபே. இந்த கஃபே காதலர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என அன்பை வெளிப்படுத்த கூடிய அத்தனை பேரை கவரும் வகையில இருக்கு.
தஞ்சையை சேர்ந்த நண்பர்களான பிராபாகரன் வீரராஜ் மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலுக்காக ஒரு கஃபே திறக்க வேண்டும் என எண்ணம் கொண்டனர். இதனை செயல்படுத்தும் விதமாக ஒரு அதே பகுதியில் க்யூபிட்ஸ் கார்னர் என்ற பெயரில் சிற்றுண்டி கடையை திறந்து அதில், பல லவ் சிம்பள்ஸ்களை சுவற்றில் மாற்றி கடையவே மினி லவ்வர்ஸ் தீம் பார்க்காவே செதிக்கியிருக்காங்க.
பாரிஸ் நகரத்தில் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக லவ் லாக் தியரிய பாலோ பண்ணுவாங்க. அதனை தஞ்சாவூரிலயும் செயல்படுத்தும் விதமாக இந்த கஃபேவில் இந்த லவ் லாக் தியரிய ஆரம்பிச்சிருக்காங்க. இங்க வர காதலர்கள் அவர்களது காதலை வெளிப்படுத்தும் விதமாக அவர்களது பெயரை பூட்டில் எழுதி லாக் செய்து விட்டு செல்கின்றனர். இந்த தகவல் தஞ்சாவூரில் தீயாக பரவ பலரும் இந்த கடையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதில் சில காதலர்களின் காதல் திருமணம் வரை செல்வதால் இந்த கடை காதலர்களின் ஃபேவரிட் இடமாக மாறியது.
இதனை கண்ட சிங்கிள்ஸ் பசங்களும் தங்களுக்கென தனிக்கடை அமையுங்கள் என கடை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கஃபே தற்போது தஞ்சையில் பலர் கவனிக்கும் இடமாக மாறி வருகிறது.
இடம்: க்யூபிட்ஸ் கார்னர் (Cupids Corner)இன்ஃபாண்ட் ஜீசஸ் காம்பிளக்ஸ்,புதுக்கோட்டை சாலை,மேக்ஸ் ஷோரூம் அருகில்,நிர்மலா நகர்,தஞ்சாவூர். தொடர்பு எண்: 098401 33848.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Lovers, Lovers day, Thanjavur