தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் சுமார் 14 ஏக்கரில் 20 ஆண்டுகளாக நெல்லிக்காய் சாகுபடியில் கில்லி போல சொல்லி அடிக்கும் லாபத்தை பெற்று வருகிறார். இவரின் விவசாய முறை குறித்து தற்போது விரிவாக அறிந்து கொள்வோம்..
தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளத்தை அடுத்த குருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி உத்திராபதி. இவரது 15 ஏக்கர் நிலத்தில், இவர் அப்பா காலத்தில் முந்திரி தோப்பு வைத்திருந்த நிலையில் பிறகு முந்திரிக்காடுகளை அழித்து நெல் சாகுபடி, கடலை, உளுந்து, காய்கறி என பல சாகுபடிகளை செய்து வந்துள்ளார்.
எதிலும் திருப்தி அடையாத இவர் சற்று வித்தியாசமான பயிர்களை சாகுபடிகளை செய்ய வேண்டும் என்று எண்ணினார்.. இதன்படி கடந்த 2002 ஆம் ஆண்டு நெல்லி சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இவரது 17 ஏக்கர் நிலத்தில், சுமார் 15 ஏக்கர் முழுவதும் நெல்லி கன்றுகளை வைத்துள்ளார்.
மேலும் படிக்க : அடேங்கப்பா.... புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசலுக்கு இவ்வளவு பெருமைகளா!
15*5 அடிக்கு ஒரு ஏக்கரிலும், 12*12 இடைவெளியில் 7 ஏக்கரும், 25*25 அடி இடைவெளியில் 7 ஏக்கர் என கன்றுகளுக்கு இடைவெளிவிட்டு நட்டுள்ளார். இந்த நெல்லிகள், காஞ்சன், சக்கையா, எண்ணைய செவன் போன்ற ரகங்களில் பயிரிட்டுள்ளார். இந்த ரகங்கள் இந்த ஊர் மன்னனுக்கு ஏற்றதாக இருப்பதாலும் இதை பயிரிட்டுள்ளார்..
மாடுகள் மூலம் இயற்கை உரம்:
இந்த மரங்களுக்கு தேவையான உரங்களை இவரே இயற்கையான முறையில் தயாரித்துக் கொள்கிறார். இவரிடம் இரண்டு மாடுகள் உள்ளது. மாடுகளில் இருந்து வரும் சாணம், கோமியம் மூலம் பஞ்சகாவியா, புண்ணாக்கு கரைசல், போன்றவற்றின் மூலம் இயற்கையான முறையில் மரங்களுக்கு உரங்களை தயாரித்து பயன்படுத்துகிறார்..
மேலும் படிக்க : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!
நெல் சாகுபடியில் அதிக அளவில் நீர் தேவைப்படும். ஆனால் இது போன்ற வறட்சியும் தாங்கி வளரக்கூடிய மரசாகுபடியில் பெரிதளவில் நீர் தேவைப்படாது இந்த ஒரு சாகுபடியை செய்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது..
இந்த நெல்லிகள் கன்று பயிரிடப்பட்ட மூன்று ஆண்டுகள் கழித்து காய்க்க ஆரம்பிக்கும், 5வது ஆண்டில் நன்கு காய்க்கும். 8வது ஆண்டில் அதிக அளவில் காய்க்கும் தற்போது இவருக்கு ஒரு ஏக்கரில் இருந்து 10 டன் வரை காய்க்கிறது, வருடத்தில் இவருக்கு 12 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது..
நெல்லி விவசாயம் குறித்து விவசாயி உத்திராபதி விரிவாக கூறுகையில், “இந்த நெல்லிகளை ஒட்டன்சத்திரம், கேரளா போன்ற பகுதிகளிலேயே விற்பனை செய்ய முடிகிறது. எங்களைப் போன்ற நெல்லி விவசாயிகள் எல்லோருக்கும் போக்குவரத்து செலவு தான் அதிகமாகின்றது.. இது மிகவும் சிரமமாகவும் இருக்கிறது ..
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே தஞ்சையில் உள்ள உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலையின் மூலம் பெரிய அளவில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சிகளை கொடுத்து கிராம பகுதிகளிலேயே தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் இதன் மூலம் பல உணவுப் பொருட்களை தயாரிக்க முடியும் இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Thanjavur