Home /thanjavur /

216 வகையான மரங்கள்: கோழி, மீன் வளர்ப்பு, படகு சவாரி- தஞ்சையில் உருவாகும் புதிய சுற்றுலாத் தலம்

216 வகையான மரங்கள்: கோழி, மீன் வளர்ப்பு, படகு சவாரி- தஞ்சையில் உருவாகும் புதிய சுற்றுலாத் தலம்

மரங்கள்

மரங்கள் சரணாலயம்

Thanjavur | தஞ்சாவூரில் மிகப்பெரிய மரங்கள் சரணாலயம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
தஞ்சாவூர் திருமலை சமுத்திரத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் மரங்கள் சரணாலயம், அமைத்து பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருமலை சமுத்திரத்தில் அரசுக்கு சொந்தமான 6.50 ஏக்கரில் பாரம்பரிய, அரிய வகையான மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் வகையில் விருட்ச வனம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் 15ம் தேதி இந்த விருட்ச வனத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் கருவாலி, திருவோடு, இத்தி, சிவகுண்டலம், அத்தி, எட்டி, மாவிலங்கை, ருத்ராட்சம் என 216 வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நடப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து நேற்று முன்தினம் திருமலைசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் பார்வையிட்டார்.

மரங்கள் சரணாலயம்


மரங்கள் சரணாலயத்தில் உள்ள சிறப்புகள்:

இந்த சரணாலயத்தில் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் புங்கனூர் பசுக்கள் மற்றும் காளை வளர்க்கப்படுகிறது, அதே போல் உலகத்திலேயே சிறிய ரகமான மலேசியன் சராமா கோழி மற்றும் பெரிய கோழியான கொலோடி பிராமஸ் இனங்களும் வளர்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் மீன் பண்ணையும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காளான் வளர்ப்பு போன்றவைகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அரிய வகை மரங்கள்


எதிர் வரும் நாட்களில் பொதுமக்களுக்கு இந்த கோழிகள், காளான், பால், மீன்கள் விற்பனைக்கு வர இருக்கிறது. மேலும் வரும் நாட்களில் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இந்த சரணாலயம் சுற்றுலாத் தலமாக மாற உள்ள நிலையில் மினி தியேட்டர், படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் வகையில் பூங்கா, பார்கிங் வசதி, கேண்டின் வசதி போன்ற பல வசதிகள் அமைக்கப்படவுள்ளது. மேலும் இந்த சரணாலயம் உருவாக காரணமாக இருந்த திருமலை சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவருக்கும், தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கும் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாட்டு வகை கோழி


மேலும் இது குறித்து திருமலை சமுத்திரத்திறம் ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தொடங்கிய முயற்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் பெறும் ஒத்துழைப்பால் இந்த மரங்கள் சரணாலயமானது அமைக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த சரணாலயம் பொதுமக்களுக்கு பொழுதுபோக்காகவும், பயன்பெறும் வகையிலும் இருக்கும்.

இந்த மரங்கள் சரணாலயத்தில் திருமலை சமுத்திரம் ஊராட்சி மூலம் அரசுக்கு வருமானம் ஏற்படுத்தி தரும் வகையில் அமையும். மேலும் தமிழ்நாட்டில் இதை விட பெரிய சரணாலயம் அமைக்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி