வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை, தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர், பெரியார் நடத்திய சமூகநீதி போராட்டங்களில் வைக்கம் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். BYTE வரலாற்று சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும், மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் ஓராண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
இதையடுத்து ஒவ்வொரு கட்சியை சார்ந்த உறுப்பினர்களும் அவரவர் கட்சி சார்பிலே இந்த அறிவிப்பை வரவேற்று பேசி அமர்ந்தனர். அப்போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா அறிவிப்புக்கு நாமநவமியை நினைவூட்டி பேசினார்.
மேலும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா குறித்து 100 ஆண்டு விழா குறித்த முதல்வரின் அறிவிப்பு குறித்து வரவேற்று பேசிய பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வாழ்த்துகள் என்றார். அதே போல இன்று ஸ்ரீராம நவமி ராமர் பிறந்த தினம் என்பதையும் முதல்வர் நினைவு கூற வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Nainar Nagendran, TN Budget 2023