Home /thanjavur /

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலம்பம் பட்டயப் படிப்பு சேர்க்கை ஆரம்பம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலம்பம் பட்டயப் படிப்பு சேர்க்கை ஆரம்பம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலம்பம் பட்டயப் படிப்பு சேர்க்கை ஆரம்பம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிலம்பம் பட்டயப் படிப்பு சேர்க்கை ஆரம்பம்

Thanjavur | தமிழர்களின் மரபு கலையான சிலம்பாட்டம் பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பட்டயப்படிப்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தமிழர்களின் மரபு கலையான சிலம்பாட்டம் பட்டய படிப்பு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பட்டயப்படிப்பாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசானது தமிழர்களின் மரபு கலையான சிலம்பாட்டத்தை மீட்டெடுக்கும்ம் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலம் சேர்க்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சிலம்பாட்டத்தில் பட்டய வகுப்புகளை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. அதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு மற்றும் சேர்க்கை நேற்று தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புல அரங்கில் நடைபெற்றது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தமிழக அரசின் விதிகளுக்குட்பட்டு இனவாரி சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்பட்டது.

    Also Read : தஞ்சாவூர் பகுதி விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

    கலந்தாய்வில் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் பேசியதாவது:- இந்த ஆண்டு பல்வேறு பட்டய படிப்புகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றுள் குறிப்பாக சிலம்பாட்டத்திற்கான பட்டய படிப்பிற்கு மட்டும் 200 இடங்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    சிலம்பாட்டக் கலைக்குப் புத்துயிர் ஊட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட சீரிய நடவடிக்கை எனில் அது 100 சதவீதம் உண்மையே. அடுத்த ஆண்டு முதல் சிலம்பாட்டத்தில் இளநிலை பட்டயம் மட்டுமல்லாது, முதுநிலை பட்டய படிப்பும், சிலம்பாட்டத்திற்கான முழுநேர பட்டய படிப்புகளும் கொண்டுவரப்படும் என்றார். பின்னர், சேர்க்கை பெற்றவர்களுக்கான உறுதிப்படிவத்தை துணைவேந்தர் திருவள்ளுவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இலக்கியத்துறையின் தலைவரும் கலைப்புல முதன்மையருமான இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையர் கவிதா தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் இயக்குனர் திலகவதி, ஒருங்கிணைப்பாளர் சீமான் இளையராஜா, துணை ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Tanjore

    அடுத்த செய்தி