முகப்பு /தஞ்சாவூர் /

தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்கிய விவகாரம்- தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்கம் போராட்டம்

தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்கிய விவகாரம்- தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்கம் போராட்டம்

X
தமிழ்

தமிழ் தேசிய பேரியக்கம்

Thanjavur | தஞ்சாவூரில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ் இளைஞர்களை தாக்கிய விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சையில் தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழக இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வேகமாக பரவத் தொடங்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்புகளும் இது குறித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டன.

அதனை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்‌. இச்சம்பவம் குறித்து தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் தஞ்சையில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ’தமிழ் நாடு அரசே தமிழர்களைப் பலி இடாதே.. வெளியாரை வெளியேற்று" என்ற வாசகத்தை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய பேரியக்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உணவில் கலப்படமா? திருநெல்வேலியில் செயல்படும் நடமாடும் உணவு பரிசோதனை வாகனம்

காவல்துறையினர் கட்டுப்பாட்டில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வரையில் தடுப்புகள் வைத்து போக்குவரத்து மாற்றப்பட்டது. இதில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

First published:

Tags: Local News, Thanjavur