முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / துறை வாரி சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி பேச முடியும் - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்

துறை வாரி சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி பேச முடியும் - பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது நிதி நெருக்கடி மிகவும் மோசமானதாக இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

  • Last Updated :
  • Chennai, India

திமுக ஆட்சிக்கு வந்தபோது மிகவும் மோசமான நிதிநெருக்கடி இருந்தபோதிலும் மகத்தான சாதனை புரிந்துள்ளதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனக்கு முதலில் வைக்க நினைத்த பெயர் அய்யாதுரை எனவும், மே 7ம் தேதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன் என்றும், இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக தான் ஆளவேண்டும் என மக்கள் எண்ணும் வகையில் ஆட்சி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:  "சிறுவாணியில் தடுப்பணை ஆய்வு செய்து நடவடிக்கை" - அமைச்சர் துரைமுருகன் உறுதி

மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது நிதி நெருக்கடி மிகவும் மோசமானதாக இருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு வருவாய் பற்றாக்குறை ரூ.30ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், துறைவாரியாக சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: MK Stalin, Tamil News, TN Assembly