Home /thanjavur /

தஞ்சையின் தாஜ்மஹால்.. ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பற்றி தெரியுமா?

தஞ்சையின் தாஜ்மஹால்.. ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் பற்றி தெரியுமா?

தஞ்சாவூர்

தஞ்சாவூர் - ஓரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்

Thanjavur - Orathanadu Muthammal Chathiram | தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் கிபி.1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர். இதில் ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம் முக்கியமானதாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur
200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மராட்டிய ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட முத்தம்மாள் சத்திரம் தற்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக மாற இருக்கும் நிலையில் இந்த முத்தம்மாள் சத்திரம் பற்றிய வரலாற்றினை இத்தொகுப்பில் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்..

தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் கிபி.1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை அமைத்தனர். இவற்றில் தஞ்சாவூரில் காஞ்சி வீடு சத்திரம், சிரேயஸ் சத்திரம், சூரக்கோட்டையில் சைதாம்பாள்புரம் சத்திரம், ராசகுமரபாயி சத்திரம், ஒரத்தநாட்டில் முத்தம்மாள் சத்திரம், பட்டுக்கோட்டை காசங்குளச் சத்திரம், தனுஷ்கோடியில், சேதுகரை சத்திரம் என 20 சத்திரங்கள் முக்கியமானவை

ஒரத்தநாட்டில் உள்ள முத்தம்மாள் சத்திரம்

இரண்டாம் சரபோஜி மன்னரின் முதல் மனைவியான முத்தம்மாள் சிறு வயதிலேயே இறந்துவிட்டார் அவர் இறப்பதற்கு முன்பு சத்திரம் ஒன்றை அமைக்கும்படி மன்னரிடம் வேண்டிக்கொண்டார். எனவே அவருடைய நினைவாக 1800-ல் இரண்டாம் சரபோஜி மன்னரால் இந்த முத்தம்மாள் சத்திரம் கட்டப்பட்டது என இங்குள்ள மராட்டிய கல்வெட்டு குறிப்பிடுகிறது.

தஞ்சையின் தாஜ்மஹால் முத்தம்மாள் சத்திரம்


காசியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு யாத்திரை செல்லும் வழியில் ராமேஸ்வரம் செல்லும் யாத்ரீகர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்துடன் கூடியதாக இந்தச் சத்திரம் இருந்துள்ளது.

அழகிய தோரண அமைப்புடைய யானை, குதிரை பூட்டிய தேர் சக்கர வாயில் பகுதியும், தூண்கள் தாங்கி நிற்கும் பெரிய முற்றங்களும், ஆங்காங்கே சிவலிங்கமும், மேல்தளத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் மரத்தால் அமைக்கப்பட்ட தூண்களும், நீர் நிறைந்த கிணறும் பழமை மாறாமல் உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்...

ஒருகாலத்தில் சத்திரமாகவும் பின்னர் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் பள்ளிக்கூடமாகவும் அதைத் தொடர்ந்து விடுதி மாணவர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. சேதம் அடைந்து தற்போது பாதுகாப்பற்ற நிலையில் உள்ள முத்தம்மாள் சத்திரத்தை பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் துறைக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக தொல்லியல் துறை மேற்பார்வையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

தஞ்சையின் தாஜ்மஹால் முத்தம்மாள் சத்திரம்


ஷாஜகான் தனது மனைவி மும்தாஜுக்கு ஆக்ராவில் தாஜ்மகால் கட்டியது போல தெற்கே தஞ்சையில், ஒரத்தநாட்டில் சரபோஜி மன்னர் கட்டிய இந்த முத்தம்மாள் சத்திரம் விளங்குவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

ஓரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் அமைவிடம்:

Thanjavur Muthammal Chathiram
தஞ்சாவூர் - ஓரத்தநாடு முத்தம்மாள் சத்திரம்
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி