ஹோம் /தஞ்சாவூர் /

சுவாமிமலை கோவிலில் கந்த சஷ்டி திருவிழா - வரும் 24ம் தேதி தொடக்கம்.. 

சுவாமிமலை கோவிலில் கந்த சஷ்டி திருவிழா - வரும் 24ம் தேதி தொடக்கம்.. 

சுவாமி மலை

சுவாமி மலை

Swamimalai Temple | முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றான தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சுவாமிமலையில் 12 நாள் கந்த சஷ்டி திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது இங்கு வரும் பக்தர்களுக்கு ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே  சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலானது முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இங்கே சூரபத்மனை, முருகன் வதம் செய்த ‘சூரசம்ஹார’ நிகழ்வு கந்த சஷ்டி திருவிழாவாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வரும் 24ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, அடுத்த மாதம் நவம்பர் 4ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதன்படி அக்டோபர் 25ம் தேதி சந்திரசேகரர், அம்பாள், வள்ளி - தெய்வானை, சண்முகர் சமேதரமாக, வீரகேசரி, வீரபாகு உடன் மலைக்கோவிலில் இருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க : இப்படியெல்லாம் கட்டாயப்படுத்த கூடாது..! - தஞ்சாவூர் விவசாயிகள் கோரிக்கை..!

 அதனைத்தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. அக்டோபர் 30ம் தேதி வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தாயார் மீனாட்சி அம்மனுடன், சண்முக சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்குதல் நிகழ்வு நடைபெறும்.

இதனைத்தொடர்ந்து கிழக்கு சன்னதியில், கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கிற நிகழ்வும், தெற்கு வீதியில் சூர பத்மனை வதம் செய்யும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க : குழந்தை பாக்கியம் பெற, கர்ப்பத்தை காக்க தஞ்சையில் முக்கிய கோவில் - கர்ப்பரட்சாம்பிகையின் சிறப்புகள்...

மறுநாள் 31ம் தேதி தேதி சண்முகர் (முருகன்) காவிரி ஆற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பின்னர் 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவ விழா நடக்கிறது.

இந்நிலையில், விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பேருந்து வசதிகள், கழிவறை வசதிகள், தூய்மையான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர் சிரமம் இன்றி கீழ் பிரகாரத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தெற்கு ராஜகோபுரத்தில் இருந்து சாய்வு தளம் அமைத்து சக்கர நாற்காலியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கந்த சஷ்டி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு தினமும் மதியம் கற்கண்டு பால் வழங்க கோவில் துணை ஆணையர் உமாதேவி மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். எனவே, பக்தர்கள் ஆறுபடை வீட்டுகளுள் ஒன்றான் இந்த சுவாமிமலைக்கு வந்து விழாவில் பங்கேற்று முருகனின் அருளை பெற்றுச் செல்லுங்கள்.

Published by:Karthi K
First published:

Tags: Kumbakonam, Local News, Tanjore