முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சையை‌ கூல் படுத்திய கோடை மழை... குஷியான பொதுமக்கள்..!

தஞ்சையை‌ கூல் படுத்திய கோடை மழை... குஷியான பொதுமக்கள்..!

X
மழை 

மழை 

Thanjavur rain | தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தஞ்சாவூரில் மழை கொட்டி தீர்த்தது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சித்திரை மாதம் தொடக்கத்திலிருந்து மேலும் வெயில் கொளுத்தி வருகிறது.. இரவிலும் அதன் தாக்கம் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க | களைகட்டிய தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா.. பரதம் ஆடி அசத்திய மாணவிகள்!

அதன்படி சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரிரு நாட்கள் மழை பெய்தது , தஞ்சையில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் தென்பட்ட நிலையில் இன்று தீடிரென மாலை நேரத்தில் சிறிது நேரம் மழை பெய்தது.. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் வெப்பத்தால் வதங்கி வந்த தஞ்சை சற்று குளிர்ந்த நிலையில் மாறியது. இது பொதுமக்களிடையே சிறிது நேரம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் தென்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Heavy rain, Local News, Thanjavur