முகப்பு /தஞ்சாவூர் /

திடீரென கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பெண்கள் மௌன போராட்டம்..

திடீரென கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பெண்கள் மௌன போராட்டம்..

X
போராட்டத்தில்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Womens Protest in Tanjore : தஞ்சாவூரில் பெண்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு மௌன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் பெண்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர். அவரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளுக்கு நாள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தில்லியில் நீதி கேட்கும் மகள்கள், தமிழகத்தில் இருந்து ஆதரவு தரும் தாய்மார்கள் என்ற மவுன அறவழி போராட்டம் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், நேற்று தஞ்சை ரயில் நிலையம் முன்பு 50க்கும் மேற்பட்ட பெண்கள் கண்களில் கருப்பு துணிகட்டிகொண்டு முழக்கங்கள் எழுப்பாமல் மெளனமாக ஊர்வலமாக வந்தனர். பின்னர் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தம் முன்பு மெளனம் காத்து போராட்டம் செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் காவல்துறையினரால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

First published:

Tags: Local News, Thanjavur