முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி சுப்பிரமணியர் விழா!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி சுப்பிரமணியர் விழா!

X
தஞ்சை

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா

Subramanian Festival Was Held In Tanjore Periya Koil : சித்திரை திருநாளையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் சுப்பிரமணிய விழா மற்றும் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

  • Last Updated :
  • Thanjavur, India

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் தமிழர்களை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் தன்வசம் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. சிற்பக்கலை, கட்டிக்கலைக்கும் சான்றாக இருக்கும் இந்த கோயிலை பார்த்து வியக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்த கோயிலில் நடக்கும் சதய விழாவும், சங்கீத நாட்டிய நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். இந்த கோயிலில் ஆண்டுதோறும் சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற விழாக்கள் நடக்கும். இந்த விழாக்களில் ஒன்று சித்திரை பெருவிழா. சித்திரை தேரோட்ட விழாவிற்கு கடந்த 17ம் தேதி பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இந்நிலையில், மே 1ல் பெருந்திருவிழா எனப்படும் தேரோட்டம் தஞ்சை வீதிகளில் உலா வரவுள்ளது. இறுதி நாளான மே 5ல் தீர்த்தவாரி விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று வரை தினமும் இரவில் சுவாமி ஊர்வலமும், திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.‌ அதன்படி நேற்று சுப்பிரமணியர் விழா நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விழாவில் மாடு மேல் முருகன் அமர்ந்துள்ளது போன்ற அற்புத காட்சியோடு பெரிய அளவிலான 4 சக்கர இழு வண்டியில் கோயிலிலும், வீதிகளிலும் சுப்பிரமணிய சுவாமி வலம் வந்தார். மேலும் சுவாமிமலை திருமுறை இசைக்கலை மணி வடிவேல் ஓதுவாரின் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்.

top videos
    First published:

    Tags: Local News, Thanjavur