ஹோம் /தஞ்சாவூர் /

Thanjavur | ஒரத்தநாடு அரசு பள்ளியில் கட்டிட வசதி இல்லாமல் ஆய்வகத்திலிருந்து படிக்கும் மாணவர்கள்

Thanjavur | ஒரத்தநாடு அரசு பள்ளியில் கட்டிட வசதி இல்லாமல் ஆய்வகத்திலிருந்து படிக்கும் மாணவர்கள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அரசுப் பள்ளி

Thanjavur | தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலுள்ள அரசுப் பள்ளியில் போதிய கட்டிட இட வசதியில்லாமல் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Orathanadu (Mukthambalpuram), India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சேதுராயன் குடிகாடு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 150க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மொத்தம் இப்பள்ளியில் மூன்று கட்டிடங்கள் உள்ளன. அதில் ஒரு கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் மீதம் இருக்கும் இரண்டு கட்டிடத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு என தனி அறையும் இல்லை. இருக்கும் ஆசிரியர் அறையும் மாணவர்கள் படிக்கும் வகுப்பறையாக மாறியது. மாணவர்களுக்கு வகுப்பறை இல்லாததாலும் ஆய்வகங்களிலும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இந்த ஒரு பிரச்சனை மட்டுமே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

தஞ்சாவூர் அரசுப் பள்ளி

இன்னும் மூன்று வகுப்புகள் கொண்ட ஒரு கட்டிடம் அமைத்து தந்தால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

மேலும் இதுகுறித்து கிராம பள்ளி வளர்ச்சி குழுத் தலைவர் பேசும்போது, ‘சேதுராயன் குடிக்காடு அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி இரண்டிலும் போதுமான அளவிலான கட்டிட வசதிகள் இல்லாமல் இரண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இரண்டு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அறை இல்லை. இது நீண்ட நாள் பிரச்சினையாக இருக்கும் நிலையில் பலமுறை கவுன்சிலர், எம்எல்ஏவிடம் மனுக்களை அளித்துள்ளோம். செய்து தருகிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே தயவு செய்து இந்த இரண்டு அரசு பள்ளிக்கும் போதுமான அளவிலான கட்டிட வசதிகளை ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur