ஹோம் /தஞ்சாவூர் /

பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள்

பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள்

சாலையில்

சாலையில் நிற்கும் மாணவர்கள்

Thanjavur | தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி அருகே பயனியர் நிழற்குடை மற்றும் போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அருகே உள்ள ஈச்சங்கோட்டை அரசு வேளாண்மை கல்லூரி அருகே பயணியர் நிழற்குடை, பேருந்து வசதி இல்லாததால் நீண்ட தூரம் சுற்றிச் சென்று பேருந்து ஏற வேண்டிய சிரமத்துக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர்.

தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே உள்ள ஈச்சங் கோட்டை அரசு வேளாண் ஆராய்ச்சி மையம் மற்றும் வேளாண் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த வேளாண் கல்லூரிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விவசாயிகள், இயற்கை ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர், மாணவிகளின் பெற்றோர்கள் கல்லூரிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நிழக்குடை இல்லாமல் பேருந்துக்காக நிற்கும் மாணவர்கள் 

கல்லூரியின் முன்பு பேருந்து நிறுத்தத்தில் நிழல் குடை இல்லை. கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகளும், விவசாயிகள் மற்றும் பெற்றோர்களும் மழை காலங்களில் மழையில் நனைந்தும், வெயில் காலங்களில் வெயிலில் நிற்க வேண்டிய அவல நிலையும் ஏற்படுகிறது.

பேருந்துக்காக நிற்கும் மாணவர்கள்

வேளாண் கல்லூரி செல்லும் வழியில் ஒரே ஒரு

பேருந்து மட்டுமே இந்த சாலையில் போக்குவரத்துக்கு அரசு அனுமதிப்பதால் பேருந்து போக்குவரத்து இல்லாமல் கல்லூரி மாணவ, மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வேளாண் கல்லூரி

அதேபோல, வேளாண் கல்லூரி முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்காக பேருந்து நிழல் குடை அமைத்து தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மாணவர்கள், ‘நாங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு தங்கி படித்து வருகிறோம். கேரளாவில் இருந்து கூட பலர் இங்கு படிக்கிறார்கள். விடுமுறை காலங்களிலோ அவசர தேவைக்கு வெளியில் செல்லவோ பேருந்து வசதி இல்லாமல் இருக்கிறது. எங்களைக் காண வரும் பெற்றோர்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

அனைத்து மாவட்டப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் தான் வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு நேரடி பேருந்து வசதி கிடையாது பழைய பேருந்து நிலையம் சென்று சுமார் 15 கி.மீ சுற்றி வர வே.ண்டியுள்ளது. பயணியர் நிழற்குடையும் இல்லை. இதனால் அனைவரும் கடும் வேதனைக்கு உள்ளாகி வருகிறோம்.

எனவே புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தி பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur