ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

தஞ்சாவூரில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

மின் இணைப்பு 

மின் இணைப்பு 

Thanjavur District | தஞ்சாவூரில் உள்ள மின்சார அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் உள்ள மின்சார அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான காலக்கெடு 2023 ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

இந்நிலையில், ஆங்காங்கே இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சாவூர் நகர செயற்பொறியாளர் மணிவண்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தஞ்சை நகரிய கோட்டத்தில் உள்ள வீடு, விவசாயம், கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,02,463 ஆகும். இவற்றில் 80,364 எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மீதமுள்ள 22,99 எண்ணிக்கை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, தஞ்சை மேற்கு, நீதிமன்றசாலை, மானம்புச்சாவடி, அருளானந்தநகர், ஈஸ்வரிநகர், கரந்தை, அரண்மனை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? அரசு மருத்துவர் விளக்கம்

எனவே நகரிய கோட்டத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ள 22,99 மின் நுகர்வோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Aadhaar card, Local News, Thanjavur, TNEB