ஹோம் /தஞ்சாவூர் /

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Thanjavur | தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற வர தஞ்சாவூரில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

சிறப்பு பேருந்துகள்:

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகை வருகிற 24ஆம் தேதி கொண்டா டப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு போக் குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்விதசிரமம் இன்றி, இடையூறு இன்றி பயணம் செய்ய ஏது வாக சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட் டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக் கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழக இயக்க பகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இன்று முதல் 23ஆம் தேதிவரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Must Read : அடடே... வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டதா! - விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

தற்காலிக பேருந்து நிலையங்கள்:

சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சை, பட்டுக் கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் தாம்பரம் சானிடோ ரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர் காழி, திருவாரூர், திருத்து றைப்பூண்டி, வேதாரண்யம் தட பஸ்கள் கோயம்பேடு டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப் பட உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தீபாவளி முடிந்து திரும்புவர்கள் அவரவர் ஊர்களுக்கு செல்ல வருகிற 24ஆம் தேதி முதல் 26ஆம தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Diwali festival, Local News, Special buses, Thanjavur