Home /thanjavur /

பொன்னியின் செல்வனில் வரும் தஞ்சை பழையாறை இப்போது எப்படி இருக்கிறது?

பொன்னியின் செல்வனில் வரும் தஞ்சை பழையாறை இப்போது எப்படி இருக்கிறது?

பழையாறை கோவில்

பழையாறை கோவில்

பொன்னியின் செல்வன் நாவலில் வியந்து போற்றும் தஞ்சை பழையாறை அரண்மனை இப்போது எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வோம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
கி.பி எட்டாம் நூற்றாண்டில் சோழர்களின் தலை நகரமாக புகழ்பெற்று விளங்கியது ‘பழையாறை’. இன்று இந்தத் தலைநகரம் சுற்றிலும் வரலாற்றை நிருபிக்கும் பெயர்கள் கொண்ட சிறு கிராமங்கள் சூழ்ந்து காட்சி அளிக்கின்றன. கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வன் நாவலில், பாதுகாப்பு மிகுந்த பழையாறை அரண்மனையில் குந்தவை பிராட்டி வசிக்கும் விதத்தையும், வந்தியத்தேவன் குந்தவையை சந்திப்பதையும் அங்கிருக்கும் நந்தவனத்தையும் அழகுற வர்ணிப்பார்.

அந்த இடத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை அவரின் வர்ணிப்புகள் தூண்டும். அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளார். அது விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஆதித்த சோழனின் திருப்புறம்பயம் போர் வெற்றியைக் குறிக்க கட்டிய கோவில் பழையாறை சோமநாதர் ஆலயம். இதனைச் சுற்றிலும்‘புதுப்படையூர்’, ‘ஆரியப் படையூர்’, ‘மணப்படையூர்’, ‘பம்பப்படையூர்’. பெரும் படைகள் ஸ்தாபனம் ஆகி இருந்த ஊர்கள் வரலாற்றை பறைசாற்றும் விதத்தில்உள்ளன.

சோமேஸ்வரர் திருக்கோவில்


பிரசித்தி பெற்ற கோயில்கள் ஒவ்வொரு இரண்டு கி.மீ தூரத்திலும் உள்ளன. பட்டீஸ்வரம், தாராசுரம், சத்தி முற்றம், முழையூர், திருநந்திபுர விண்ணகரம். இது நாதன் கோவில் என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேச கோயில்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. இவை அனைத்தும் அருகருகே உள்ளன. காவிரியின் கிளை நதிகள் பாய்ந்தோடும் அப்பகுதிகள் இன்று விவசாயக் கிராமங்களாக இருக்கின்றன.

சோமேஸ்வரர் திருக்கோவில்


கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், தாராசுரமில் இருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது பழையாறை. பழையாறையில் உள்ள சோமேஸ்வரர் திருக்கோவிலை பழையாறை வடதளி என்றும் அழைப்பர். இன்று சிதிலமடைந்த கோபுரத்துடன் காணப்படுகிறது.

பழையாறையின் நான்கு தளிகள் என நாற்புறமும் இருந்த பெருங்கோவில்களில் இன்று எஞ்சியிருப்பது வடதளியாகிய இந்த சோமநாதர் ஆலயம் மட்டுமே. பழையாறை அருகில் உள்ள சோழன் மாளிகை, மன்னனின் அரண்மனை யாவும் பூமிக்குள் புதையுண்டு போயுள்ளன.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி