முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை அருகே வடக்கூரில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

தஞ்சை அருகே வடக்கூரில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

X
பழமையான

பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு

தஞ்சாவூர் அருகே பழங்கால சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது குறித்து விவசாயிகள் அப்பகுதி மக்களிடம் தெரிவிக்கவே, பலர் வந்து இங்கு பார்வையிட்டு லிங்கத்தை வணங்கி செல்கின்றனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டம் வடக்கூரில் காசவாள நாடு எல்லையில் சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் இப்பகுதியில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது சிறிய அளவிலான கல் தென்பட்டுள்ளது. அந்த இடத்தில் தோண்டியபோது 5 அடியுள்ள சிவன் சிலை  இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து விவசாயிகள் அப்பகுதி மக்களிடம் தெரிவிக்கவே, பலர் வந்து இங்கு பார்வையிட்டு லிங்கத்தை வணங்கி செல்கின்றனர்.

சிவலிங்கம் 

சிவலிங்கம் இருக்கும் பகுதியின் ஒரு சில கி.மீ தொலைவில் தெற்கிலும் வடக்கிலும் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயிலின் மையப்பகுதியில் இந்த லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோயில் இருந்ததாக கிராமத்தினர் கூறுகின்றனர். அதற்கு சாட்சியாக லிங்கத்தின் வடக்கு திசையில் கோவிலூரில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் விவசாய நிலமானது சிவலிங்கத்தை சுற்றிலும் இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் லிங்க வடிவத்தில் சிறிய அளவிலான சுவர் புதைந்துள்ளது. லிங்கத்தின் எதிர்புறத்தில் மிகப்பெரிய குளமும் அமைந்துள்ளது. மேலும் அங்குபூட்டு வடிவிலான பழங்கால கல் ஒன்று கிடந்தது. அதில் ஏதோ எழுதி இருப்பது போன்ற தெரிந்தது. என்ன இருக்கிறது என்று உற்றுநோக்கையில் நமக்கு தெரிந்த வரையில் அதில் 'ஓம்' என்ற வாசகம் எழுதியிருப்பது போல இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இங்கு கோயில் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே இந்த இடத்தில் அரசு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால், நந்தி போன்ற பல கற்சிலைகள் இருக்கலாம் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

First published:

Tags: Local News, Tanjore