முகப்பு /தஞ்சாவூர் /

வீட்டிலேயே ஹெர்பல் பொருட்கள் தயாரித்து நாடு முழுதும் விற்பனை.. வெற்றி ரகசியத்தை சொன்ன தஞ்சை பெண்..

வீட்டிலேயே ஹெர்பல் பொருட்கள் தயாரித்து நாடு முழுதும் விற்பனை.. வெற்றி ரகசியத்தை சொன்ன தஞ்சை பெண்..

X
தஞ்சை

தஞ்சை

Thanjavur Business Woman | வீட்டிலிருந்தே உலக நாடுகள் வரை நம் கிராமங்களில் கிடைக்கும் மூலிகை பொருட்களைக் கொண்டு ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி வரும் தஞ்சாவூர் பெண்மணி விஜயா மகாதேவன் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் விஜயா மகாதேவன். இவரது கனவர் தஞ்சை அடுத்த அய்யம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். பி.ஏ தமிழ் இலக்கியம் படித்த இந்த பெண்மணி ஆரம்பத்திலேயே இயற்கையான முறையில் ஆயுர்வேத பொருட்களின் மகத்தான நண்மையை உணர்ந்ததால் வீட்டிலேயே ஆயுர்வேத பற்பொடி, ஆயுர்வேத சோப், போன்ற பொருட்களை தயாரித்து தன் குடும்பத்தாருடன் பயன்படுத்தி வந்துள்ளார்.

மேலும் இதை நாம் மட்டும் ஏன் பயன்படுத்த வேண்டும், விற்பனையும் செய்யலாமே என்ற இவரது மகன்களின் ஆலோசனையில் இன்ஸ்டாகிராமில் வசீகர வேதா எனும் பக்கத்தில் முதல் முதலாக கடந்த 2017ம் ஆண்டு ஆயுர்வேத பற்பொடியை விற்பனைக்காக பதிவிட்டுள்ளனர். ஆரம்பத்தில் பெரிதளவில் யாரும் வாங்கவில்லை என்றாலும், ஒரு சில மாதங்களுக்கு பிறகு ஆயுர்வேத பற்பொடியை பலர் ஆர்டர் செய்ய தொடங்கினர். பிறகு மெல்ல, மெல்ல ஆர்டர்களும் குவியத்தொடங்கியது.

அதன் பிறகு ஆயுர்வேத பற்பொடி மட்டுமில்லாமல், ஆவாரம் பூ குளியல் சோப், தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை கற்றாழை போன்ற சில பொருட்களான ஹேர் ஆயில், முடி உதிர்வதை தவிர்ப்பதற்கு ஹேர் ஆயிலுக்கு செய்யப்பட்ட எண்ணெயை பவுடராக மாற்றி தலையில் தேய்த்து குளிப்பதற்கு, ஹேர் மாஸ்க், செம்பருத்தி டீ பவுடர், பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற 8 வகையான ஃபேஸ் பேக், குழந்தைகளுக்கு தேவையான ஆயுர்வேதம் பொருட்கள், போன்றவையும் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் வீட்டிலேயே ஆட்டி விற்பனை செய்து வருகிறார். இதுபோன்ற உடலுக்கும், முடிக்கும், சருமத்திற்கு தேவையான எண்ணற்ற வகையான பொருட்களை இயற்கையாக நம் பாரம்பரிய ஆயுர்வேத முறையில் செய்து சோஷியல் மீடியா மூலம் இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

சவாலான இயற்கை மூலப்பொருட்கள் :

கெமிக்கல் கலந்து பொருட்களை தயாரிப்பதில் மூலப்பொருட்கள் மிக எளிதாக கிடைத்தாலும், இதுபோன்று ஆயுர்வேத முறைப்படி செய்ய சில பொருட்கள் ஒரு சில சீசன்களில் மட்டுமே கிடைக்கும். எனவே அதுபோன்ற கையாந்தரை, கடுக்காய், பொடுதலை, கருமூலா, ஆவாரம்பூ போன்ற பலவிதமான பொருட்களை தேவையான அளவிற்கு மொத்தமாக வாங்கிய பிறகு மொத்தமாக தயாரிக்கின்றனர். பதிவிட்ட சில நாட்களிலேயே பொருட்கள் தீர்ந்து விடுவதால் மறுபடியும் அந்த சீசனில் பொருட்கள் கிடைக்கும்போது மட்டுமே இந்த பொருட்களை தயாரிக்கின்றனர்.

இதற்காக தன்னுடைய 3 ஏக்கர் வயலில் கரும்பு நெல், சாகுபடி செய்து வந்த நிலையில், செம்பருத்தி டீ பவுடர் மற்றும் செம்பருத்தி பேஸ்பேக் போன்ற செம்பருத்தியிலான ஆயுர்வேத பொருட்களுக்காக இவரது வயலிலேயே சுமார் 3,500 செம்பருத்தி செடிகளும், குறைந்த அளவிலான ரோஸ் செடிகளும் சாகுபடி செய்து வருகிறார்.

கொட்டாச்குச்சியை கூட வீணாக்குவதில்லை :

தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்காக பயன்படும் தேங்காயின் மூடிகளை வீணாக்காமல்‌ ஆயுர்வேத பவுடர்களை கலப்பதற்காக சாதாரண தேங்காய் மோடியை பளபளப்பாக பார்க்கும்போது புன்னகை ஏற்படும் வகையில் மாற்றி அதையும் வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்.

சோசியல் மீடியாவின் பலம் :

தொடக்கத்தில் முதன் முதலில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பற்பொடி பிறகு வசீகர வேதா எனும் பெயரில் சோசியல் மீடியா மற்றும் இணையதளத்திலும் விற்பனை செய்து வருகிறார். இவர்களிடம் தமிழ்நாடு மட்டுமின்றி வடமாநில பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் அதிக அளவிலான ஆர்டர்கள் குவிக்கின்றன..

பெண்களுக்கு வேலை வாய்ப்பு :

இவர் தயாரிக்கும் அனைத்து வகையான ஆயுர்வேத பொருட்களையும் கடந்த 2017லிருந்து வீட்டிலிருந்தே தான் செய்து வருகிறார். மேலும் இங்கு வேலை செய்யும் 15 பெண்கள் இவரின் அக்கம் பக்கத்தினரே அதிகபட்சம் ஒரு கி.மீ தொலைவில் உள்ளவர்கள் மட்டுமே. இதனால் சீனிவாசன்புரம் பகுதியில் உள்ள சுமார் 15 பேருக்கு வேலை வாய்ப்பையும் தருகிறார். மேலும் இங்கு உள்ள‌ அனைத்து பெண்களும் ஒரே பகுதியில் தெரிந்தவர் என்பதால் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அரட்டையுடனும் வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் வேலை செய்து வருகின்றனர். மேலும் இங்கு வேலை செய்யும் பெண்களை ஆண்டுதோறும் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மாநிலம் வரை சுற்றுலாவிற்கும் அழைத்து சென்று மகிழ்ச்சியை தருகிறார் விஜயா வாசுதேவன்.

எவ்வளவு லாபம் கிடைக்கிறது?

ஒரு கல்லூரி மாணவி முதல் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 200 ரூபாய்க்கு உள்ளேயே ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து வருகிறார். அதற்கு அதிகமான விலையிலும் பொருட்கள் விற்பனையில் இருக்கிறது. ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சம் வருமானம் பெறுகிறார். இதில் மூலப்பொருட்களின் செலவு மற்றும் பெண்களுக்கு ஊதியம் சுமார் ரூ.3 லட்சம் போக ரூ. 2 லட்சம் நிரந்தர வருமானம் பெறுகிறார்.

வெற்றியின் ரகசியம் :

இதுகுறித்து விஜயா மகாதேவன் கூறுகையில், “ஆயுர்வேத பொருட்களை வீட்டிலிருந்தே தான் செய்து வருகிறேன். புதிய தொழிற்சாலைக்கான கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. வரும் நாட்களில் நாங்கள் அனைவரும் அங்கு சென்று தொழில் செய்ய இருக்கிறோம். எங்களுடைய ஒரே கான்செப்ட் கிரீன் டாய்லெட், எழுந்ததிலிருந்து இரவு வரை நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும் கெமிக்கல் அடங்கியுள்ளது. கழிவுநீர் உடலுக்கும் கெடுதல், வீட்டிற்கும் கெடுதல். எனவே அதை சற்று மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த ஒரு இயற்கையான முறையில் ஆயுர்வேத பொருட்களை செய்து வருகிறோம்.

இந்த தொழில் செய்வதற்கு மூலப்பொருட்கள் கிடைப்பதே மிகவும் சவாலான இருக்கும். வெளி மாவட்டங்களிலும் சில பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். சொந்தமாகவும் செம்பருத்தி, ரோஸ் போன்ற செடிகளை சாகுபடி செய்து வருகிறோம். இது கிடைக்கும்போது மொத்தமாக வாங்கி உடனடியாக விற்பனையும் செய்கிறோம். வரும் நாட்களில் அதிகப்படியான ரோஸ்  பூவை சாகுபடி செய்ய வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கிறது. இதன் மூலம் அக்கம் பக்கத்தினருக்கு வேலை தருவதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் நண்பர்காளாக மாறிய பெண்களின் வாழ்வாதாரமும் என்னால் மாறுகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறினார்.

பிடிக்காத வேலையை செய்து, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையும் இல்லாமல், வெளி உலகத்திற்கு செல்ல பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சில பெண்களுக்கு மத்தியில் , வீட்டிலிருந்தே உலக நாடுகள் வரை நம் கிராமங்களில் கிடைக்கும் மூலிகை பொருட்களைக் கொண்டு ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி வரும் தஞ்சாவூர் பெண்மணி விஜயா மகாதேவன் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

First published:

Tags: Business, Local News, Thanjavur