Home /thanjavur /

தஞ்சாவூர் வீணையின் ரகசியம் இதுதான்..

தஞ்சாவூர் வீணையின் ரகசியம் இதுதான்..

தஞ்சாவூர்

தஞ்சாவூர் வீணை

Thanjavur Saraswathi Veenai: வீணை தயாரிப்பில் தஞ்சாவூர் ஏன் இவ்வளவு பிரபலமாக உள்ளது, இந்த அளவுக்குப் பிரபலமாக பேசக்கூடிய தஞ்சாவூர் வீணையின் ரகசியத்தை அறிவோமா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கலை சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரிப்பதில் தஞ்சாவூர் முக்கிய பங்காற்றி வருகிறது. அதில் முக்கிய ஒன்றாக வீணை திகழ்கிறது . வீணை என்றாலே நினைவுக்கு வருவது தஞ்சாவூர் தான்.

, இந்த அளவுக்குப் பிரபலமாக பேசக்கூடிய தஞ்சாவூர் வீணையின் ரகசியத்தையும், அந்த வீணை செய்யும் வழி முறை பற்றியும், தெரிந்துக் கொள்ள வீணை உற்பத்தி செய்யப்படும் இடத்திற்கு சென்ற போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தது.

இதுகுறித்து வீணை தொழிலில் ஈடுபட்டுள்ள 85 வயதாகும் கலியமூர்த்தி ஐயாவிடம் கலந்துரையாடினோம்...

நீங்கள் உற்பத்தி செய்யும் வீணைகள் குறித்து...

வீணையானது பலாமரத்தில் தான் செய்யப்படுகிறது, சில ஆண்டுகளுக்கு முன்பு பலா மரமானது தஞ்சாவூரில் அதிகளவில் கிடைத்து வந்தது, ஆனால் இந்த காலகட்டத்தில் பலா மரமானது தஞ்சாவூரில் கிடைக்காததால் பண்ருட்டியிலிருந்து மரம் இறக்குமதி செய்யப்பட்டு, முதலில் இயந்திரத்தில் அறுக்கப்பட்டு பின்பு தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் கோடரியால் வெட்டப்பட்ட பிறகு, அனைத்தும் கை வேலைப்பாடுகள் வீணை உற்பத்தி செய்யப்படும்..

தஞ்சாவூர் வீணை


ஒரு வீணை செய்யவதற்கு எத்தனை நாட்கள் ஆகும்?

ஒரு வீணையை ஒருவர் செய்தால் ஒரு மாத காலமாகும்.. 5 - 6 பேர் வேலை செய்தால் ஒரு வாரத்தில் வீணை செய்து முடித்துவிடலாம்..

வீணை வகைகள்..

நாங்கள் இங்கு வீணை மற்றும் தம்பூரா என இரண்டு வகை இசைக் கருவிகளையும் உற்பத்தி செய்கிறோம்,

வீணை வகைகளை பொறுத்தவரையில் சரஸ்வதி வீணை, ஒட்டு வீணை, மதுரா வீணை, யாகாண்டார் வீணை, யாழி வீணை என பல வகையான வீணைகள் முன்பதிவு மூறையில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.. கொரோனா காலத்தில் இரண்டு வருடங்களாக வீணைகள் விற்கப்படாமல் மிகவும் சிரமப்பட்டோம்..

தஞ்சாவூர் வீணை


ஏன் பலாமரத்தில் வீணை செய்கிறீர்கள்?

மன்னர்கள் காலத்தில் வீணை செய்வதற்கு ஏற்ற மரத்தின் தேடலின் போது பலா மரத்தை ராஜாக்கள் தான் தேர்வு செய்தார்கள் ,
ஏனெனில் பலா மரத்தில் பால் சத்து அதிகமிருப்பதால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த வீணையானது வலுவாக இருக்கும்.

மேலும், அந்த காலத்தில் வீணைகளை இசைக்கு மட்டுமே முடியும் ஆனால், இந்த காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இசைகளை பதிவு செய்வதற்கான வசதிகளை இந்த வகை சரஸ்வதி வீணைகளில் அமைக்கிறோம்.

தஞ்சாவூர் வீணை


மேலும், இந்த வகையான அமைப்புகளில் வீணைகளில் நாம் அதிக அளவு அடித்தள ஒளியை கூட்ட முடியும். சரஸ்வதி வீணைகள் தஞ்சாவூரில் மட்டுமே கிடைக்கும். ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் வீணைகள் கிடைத்தாலும் தஞ்சாவூரில் கிடைப்பது போல வேலைப்பாடுகள் அங்கே இருக்காது.

வீணை செய்முறை பற்றி..

சரியான அளவில் செதுக்கப்பட்ட வீணைகளில் வண்ணங்கள் பூசிய பிறகு , சுரஸ்தானத்திற்கு 24 கட்டிகளை பொருத்துவோம்.. வீணையின் இறுதிகட்ட வேலைபாடாக நுரைக் குங்குலியும், தேன்மெழுகையும் பயன்படுத்தி வீணையின் மேற்புறத்தில் வைத்த பிறகே, 24 சுரஸ்தான கட்டிகளை பொருத்துவதாகவும், பொருத்திய பிறகு இசைக்க தேவையான ஏழு விதமான கம்பிகளை இனைப்பதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பிரபலங்கள் வந்து இங்கு பார்வையிட்டுள்ளார்களா?

உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்து ஊக்கப்படுத்தி, எங்களால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் உறுதி கூறினார். எங்களிடம் வீணைகளை இணையதளத்தில் பதிவு செய்து வாங்குவதற்கான வசதிகள் உள்ளதாகவும், இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறினார்.

வீணை தயாரிப்பு குறித்து கூடுதல் தகவல்கள் பெற....

தஞ்சாவூர் வீணை ஃபேஸ்புக் பேஜிற்கான இணைப்பு..

https://www.facebook.com/people/thanjavurveenai/100066809654880/

இணையதள முகவரி: http://www.thanjavurveenaiworks.com/

தொடர்பு எண்: 97501 63636
Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur

அடுத்த செய்தி