பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை ரயிலடி நிலையம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1992ம் ஆண்டு, டிசம்பர் 6ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்த கரசேவகர்கள் லட்சக்கணக்கானோர் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலுள்ள பாபர் மசூதியை நோக்கி பேரணியாக சென்றனர்.
அந்த கும்பல் பாபர் மசூதி இருந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து 400 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியை இடித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து, அப்போதைய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா, உத்தர பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையை கலைத்தார்.
மத்திய அரசு 1993ல் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து, சர்ச்சைக்குரிய நிலத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மத்திய அரசில் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் 67.7 ஏக்கர் ஆகும்.
இதையும் படிங்க : சுவாமி மலையில் கார்த்திகை திருவிழா தேரோட்டம்
பின்னர், இந்த இடிப்பு சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில், 68 பேர் தான் இடிப்புச் சம்பவத்திற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. இதில் பல பாஜக மற்றும் விஎச்பி தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றன.
பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி மற்றும் பல தலைவர்கள் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சுமார் 28 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு, 2020-ம் ஆண்டு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்தது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் விடுதலை செய்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். தஞ்சை காவல் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore