ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் தீபாவளி விற்பனை படுஜோர்... பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்...

தஞ்சையில் தீபாவளி விற்பனை படுஜோர்... பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்...

தஞ்சை

தஞ்சை

Tanjore | நாளை தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ள நிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை அண்ணாசாலையில் தீபாவளி விற்பனை அதிக அளவில் நடைபெறுவது வழக்கம், அண்ணாசாலையில் அதிக அளவிலான ஜவுளி கடைகள் இருக்கும் நிலையில் பழைய பேருந்து நிலையம் அண்ணாசாலை முழுவதும் சாலைகளில் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

மேலும் மாநகராட்சி சார்பில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாப்பட உள்ள நிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இதில் கடந்த 4 நாட்களுக்கு முன்பே கூட்டம் வர தொடங்கிய நிலையில் போக்குவரத்து காவல் துறையினர் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு மாற்று பாதை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் தற்போது ‌கூட்ட நெரிசலில் திருடர்கள் சுற்றுவதால் காவல் துறையினர் 54 இருசக்கர ரோந்துவானங்கள் மூலம் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க : குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது... தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை...

மேலும் மாநகராட்சி முழுவதும் 1500 கேமராக்கள் மூலம் நவீன கட்டுப்பாட்டு அறையில் அசம்பாவித ஏற்படாதவாறு கண்காணித்து வருகின்றனர். மேலும் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் 1500 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்‌. தொடர்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

மேலும் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பதற்காக கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Deepavali, Local News, Tanjore