ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை... வியாபாரிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூரில் களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை... வியாபாரிகள் மகிழ்ச்சி

X
பொங்கல்

பொங்கல் விற்பனை

Thanjauvr | பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையில் தான் தமிழர்களின் பாரம்பரியம் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர்.

போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது பொதுமக்கள் பொங்கல் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர். அதில் கோலமாவு, மண் பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்துகள், வெல்லம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

பெரும்பாலும் நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதும் வழக்கம்.

தஞ்சையிலும் பொங்கல் பொருட்களை நேற்றிலிருந்தே வியாபாரிகள் விற்கத் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி வருகின்றனர். அதில் முக்கியமாக தஞ்சை நகரத்தில் கீழவாசல் பகுதியில் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் நேற்றிலிருந்து தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று இருந்தே கீழவாசல் பகுதியில் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இது குறித்து பேசிய வியாபாரிகள், ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுமக்களின் வரத்து அதிகமாக இருப்பதாகவும் பானைகள் கரும்புகளின் விலை சற்று உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் குறைந்த அளவிலே வாங்குகின்றனர். கோலமாவு, மஞ்சள் கொத்து ஆகிய பொருட்களையும் அதிக அளவில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்க தொடங்கி தொடங்கினர் எனவும் கூறினார்கள்.

செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.

First published:

Tags: Local News, Pongal 2023, Thanjavur