முகப்பு /தஞ்சாவூர் /

ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய வேலையை உதறி பிரியாணி கடை நடத்தி அசத்தும் தஞ்சை பட்டதாரி இளைஞர்.. 

ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய வேலையை உதறி பிரியாணி கடை நடத்தி அசத்தும் தஞ்சை பட்டதாரி இளைஞர்.. 

X
பிரியாணி

பிரியாணி கடை நடத்தி அசத்தும் தஞ்சை பட்டதாரி இளைஞர்

Famous Briyani Shops in Tanjore | தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ‌ தன் கை வசத்தால் உருவாகும் பிரியாணியால் உணவு பிரியர்களை கவர்ந்து வருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு அந்த வேலை பிடிக்காததால் சம்பளத்தை பெரிதும் எண்ணாமல் அந்த வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கே திரும்பி வந்துள்ளார். கார்த்திக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கார்த்தி வாழ்வாதாரத்திற்காக என்ன செய்வது என்று யோசித்தபோது இவருக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயம் பிரியாணி செய்வது மட்டும்தான். இதை ஏன் நாம் செய்து விற்பனை செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் முதன் முதலில் விளையாட்டாக தஞ்சை மூலிகை பண்ணை அருகே ரோட்டு கடையில் பிரியாணி விற்பனை செய்து வந்துள்ளார். பிறகு இவரின் பிரியாணியின் சுவையும், தரமும் அனைவருக்கும் பிடித்துப்போனது. இதனால் சோசியல் மீடியா மூலம் வாடிக்கையாளர்கள் மேலும் அதிகரித்துள்ளனர்.

பிறகு சொந்தமாக கடை போட வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகளுக்கு பிறகு தஞ்சை சுந்தரம் பெயின்டஸ் அருகே கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து கடந்த 2021ம் ஜூன் 25ம் தேதி மேதகு படம் வெளியான அதே நாளில் "மேதகு பிரியாணி" என்று கடைக்கு பெயர் வைத்து கடையை திறந்துள்ளார். தற்போது தஞ்சையில் பாத்திமா நகரிலும், சுந்தரம் பெயின்டஸ் அருகிலும் மேதகு பிரியாணி கடையை நடத்தி வருகிறார்.

ஆரம்ப காலத்தை விட தற்போது தஞ்சையில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த மேதகு பிரியாணி கடை மக்களிடம் சுவையிலும், தரத்திலும் நன்மதிப்பை பெற்றுள்ளது என இங்கு வரும் வாடிக்கையாளர்களே கூறுகின்றனர். அனைவரும் சிக்கன் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று எத்தனை ஆண்டுகள் ஆனாலும் 100 ரூபாய்க்கு அதிகமாக சிக்கன் பிரியாணியை விற்க மாட்டேன் என உறுதி வைத்துள்ளார் இந்த இளைஞர். தற்போது கூட காதலர் தினத்தன்று ரூ.143 விலையில் 2 பிரியாணியை ஆஃபரில் கொடுத்து இளைஞர்களை குஷிபடுத்தியுள்ளார்.

First published:

Tags: Local News, Thanjavur