முகப்பு /தஞ்சாவூர் /

மாணவ, மாணவிகளின் கண்ணைக் கவரும் நடனங்கள்- தஞ்சையில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டம்

மாணவ, மாணவிகளின் கண்ணைக் கவரும் நடனங்கள்- தஞ்சையில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டம்

X
கொடியேற்றும்

கொடியேற்றும் ஆட்சியர்

Thanjavur | தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கொடியேற்று ஆட்சியர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியேற்றினார். கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படாமல் இருந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இந்தாண்டு சிறப்பாக நடத்தப்பட்டது.

நாட்டின் 74-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.

தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 69 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஆ ட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

கடந்தாண்டு தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக குடியரசு தினவிழாவில் மாணவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளைரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்தாண்டு வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மாரியம்மன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் அக்சிலியம் மேல்நிலைப்பள்ளி, கள்ளப்பெரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் கிராமப்புற நடனங்கள், கும்மியாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் உட்பட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.

மேலும் தஞ்சை மேம்பாலம் இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தை சேர்ந்த பயிற்சியாளர் முபாரக் தலைமையில் மாணவர்கள் தற்காப்பு கலைகளான சிலம்பம், குங்பூ மற்றும் யோகா போன்றவற்றை செய்து காண்பித்தனர்.

38 வயதுக்கு மேல் உள்ளவர்கள்  மட்டும் பங்கேற்ற கபாடி போட்டி - தஞ்சையில் வித்தியாச முயற்சி

நிகழ்ச்சியில் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம்,கூடுதல் ஆட்சியர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், டிஐஜி ஜெயச்சந்திரன், எஸ்.பி ஆஷிஷ் ராவத், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார், தாசில்தார் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

First published:

Tags: Local News, Thanjavur