முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை மஞ்சுவிரட்டு.. மாடு பிடி வீரரை தூக்கி சுழற்றி எரிந்த காளை!

தஞ்சை மஞ்சுவிரட்டு.. மாடு பிடி வீரரை தூக்கி சுழற்றி எரிந்த காளை!

X
தஞ்சை

தஞ்சை மஞ்சுவிரட்டு

Thanjavur News | தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரத்தில் 36-வது ஆண்டாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். வீரர்களும் விழா கமிட்டியினரும் உறுதிமொழி ஏற்ற நிலையில், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் வரவழைக்கப்பட்டன.

10 காளைகள் களத்தில் விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை சுமார் 50 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். அப்போது வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள்மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

முன்னதாக மாடுபிடி போட்டி வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சொக்கநாதபுரம் ஊராட்சி தலைவர் ராம் பிரசாத் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்‌.

top videos
    First published:

    Tags: Jallikattu, Local News, Thanjavur