ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகம்

தஞ்சாவூரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு - நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகம்

ஊர்க்காவல் படை

ஊர்க்காவல் படை

Thanjavur District Home Guard Recruitment | தஞ்சாவூரில் ஊர்க்காவல் படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வினியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 1 பெண் உள்பட 35 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க : சங்கீத உலகிற்கு பெயர்போன திருவையாறுக்கு பெயர் வந்தது எப்படி தெரியுமா?

இந்த தேர்விற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நாளை (அக்டோபர் 14) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கப்படுகிறது.

ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று, உரிய முறையில் பூர்த்தி செய்து சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 புகைப்படங்கள், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை ஆகியவற்றிற்கான நகல்களை இணைத்து வரும் 17ம் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வில் கலந்துகொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தேர்வில் கலந்துகொள்ளும் அனைவரும் அசல் ஆவணங்களுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Tanjore