தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கை கட்டப்பட்டுள்ள, புகழ்பெற்றதும் பழமையானதுமான கல்லணை டெல்டா பகுதி விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், கல்லணைக் கால்வாய் பாசன வாய்க்காலை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக் கால்வாய் பாசன வாய்க்கால் புனரமைப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தொடர்பாக கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணைக்கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஒரத்தநாடு வட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் தொடங்கும் வடகாடு கிளைகால்வாய் அதன் கிளைவாய்க்கால்கள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வட்டங்களில் உள்ள ஏரிகள் புனரமைக்கப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது குறித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வி.ஆர்.டி. திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 2ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
Must Read : திருநெல்வேலி பகுதியில் உள்ள சிறப்புவாய்ந்த நவகைலாய கோவில்கள் பற்றி தெரியுமா?
எனது தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kallanai, Local News, Thanjavur