ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சையில் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு ஆட்சி நடத்திய ராஜராஜ சோழன்...

தஞ்சையில் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு ஆட்சி நடத்திய ராஜராஜ சோழன்...

ராஜ ராஜ வோழன் சிலை

ராஜ ராஜ வோழன் சிலை

Raja Raja Cholan | காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். இதற்கு தஞ்சை பெருவுடையார் கோவிலே சான்று என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன் மாம்மன்னர் ராஜ ராஜ சோழன் வலம் வந்த, அதே இடத்தில் நாம் நிற்கிறோம். சதய விழாவில் மாமன்னர் ராஜ ராஜ சோழனை புகழ்ந்தும், அவரின் செயல்களையும் போற்றியும் பேசினார் தஞ்சை மாவட்ட ஆட்சியர்.

தஞ்சையில் தற்போது, மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1037-வது சதய விழாவானது, தஞ்சை பெரிய கோவிலில் தொடங்கியது. இதையொட்டி, முதல் நாள் விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். எத்தனை மன்னர்கள் ஆண்டிருந்தாலும் சதய விழா கொண்டாடப்படும் ஒரே மன்னர் மாமன்னர் ராஜ ராஜ சோழனுக்கு மட்டும் தான். அவர் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு ஆட்சி நடத்தினார்.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

காலத்தால் அழிக்க முடியாத பல பொக்கிஷங்களை தந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன். இதற்கு தஞ்சை பெருவுடையார் கோவிலே சான்று. 1000 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மாமன்னர் குதிரை, யானைகளில் வலம் வந்திருப்பார். அந்த இடத்தில் தற்போது நாம் நிற்கிறோம். இது நமக்கெல்லாம் பெருமை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒரு மன்னர் போர் தொடுக்கும்போது படைகளுக்கு பின்னால் நிற்க கூடாது. முன் நின்று வழி நடத்த வேண்டும். அப்படித்தான் மாமன்னர் தமது படையை முன்னே நின்று வழி நடத்தியுள்ளார். பல போர்களில் வெற்றி கண்டுள்ளார் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பெருமை தெரிவித்தார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Raja Raja Chozhan, Thanjavur