ஹோம் /தஞ்சாவூர் /

ராஜ ராஜ சோழன் சதய விழாவில் அலைகடலென திரண்ட மக்களால் திக்குமுக்காடிய தஞ்சை..

ராஜ ராஜ சோழன் சதய விழாவில் அலைகடலென திரண்ட மக்களால் திக்குமுக்காடிய தஞ்சை..

ராஜ

ராஜ ராஜ சோழன் சதய விழா

King Raja Raja Cholan | தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் அன்று அவரது பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thanjavur | Thanjavur

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா தமிழ் முறைப்படி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது..

தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் அன்று அவரது பிறந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 1037-வது ஆண்டு சதய விழா வெகு விமரிசையாக நடைபெற்றது...

இந்நிலையில், நேற்று முன்தினம் தொடங்கிய ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, ஆகியவை நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு இன்று காலை 7 மணிக்கு திருமுறை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, ஓதுவார்களின் வீதியுலா நடைபெறுகிறது.

மேலும் படிக்க:  கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம் கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது..

திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதி உலா தஞ்சை மாநகர 4 விதியில் நடைபெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் திருவீதி உலாவும் சென்றது.

மேலும் படிக்க:  கருவை காத்தருளும் தஞ்சை கர்பராக்க்ஷாம்பிகை கோயில் சிறப்புகள் பற்றி தெரியுமா?

பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார்க்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி பால், மஞ்சள், சந்தனம், திருநீர், தேன், அரிசிமாவு பொடி, நெய், தயிர், பன்னீர், எலுமிச்சை பழச்சாறு, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், மூலிகைப் பொடிகள் உள்ளிட்ட 48 வகையான பொருட்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பேரபிஷேகத்தை தொடர்ந்து, மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இதையடுத்து பெரிய கோவிலுக்கு அருகே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும் படிக்க:  புவிசார் குறியீடு பெற்ற துணிகளில் கதை சொல்லும் கலம்காரி ஓவியம்

பிறகு மாலையில் மங்கள இசைகுரலிசை நிகழ்சி, ஜூகல்பந்தி நிகழ்ச்சிதிருமுறைப் பண்ணிசை, திருநெறிய தமிழிசை மேடை நிகழ்ச்சி என அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விழா முடிவில் சதய விழா குழு சார்பாக மாமன்னன் இராஜராஜ சோழன் விருது அகர்த்திய சன்மார்க்க சங்கம் அமிர்தலிங்கம், தஞ்சை மருத்துவ கல்லூரிபி.ஜி சங்கரநாராயணன் மற்றும்சைவ சித்தாந்த பேராசிரியர் ஜெயபால் ஆகிய மூவருக்கும் தஞ்சை மாவட்ட ஆட்சியரால் ராஜ ராஜ சோழன் விருது வழங்கப்பட்டது.விழாவின் கடைசி நிகழ்வாகநையாண்டி மேளம் நிகழ்ச்சி குச்சிபுடி நிகழ்ச்சி ஆகியவை நடந்து ராஜராஜ சோழனின் 137 வது சதய விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

Published by:Arun
First published:

Tags: Local News, Thanjavur