தமிழ் சினிமா நடிகைகள் எல்லாம் கடந்த சில ஆண்டுகளிலிருந்தே தனித்து பல படங்களை நடித்து அதை வெற்றி படங்களா கொடுத்துட்டு இருக்காங்க.
அந்த வகையில் நயன்தாரா நடித்த அறம், டோரா, அமலா பால் நடித்த ஆடை, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை, அஞ்சலி நடித்து ஓடிடியில் வெளியான ஃபால் போன்ற தமிழ் சினிமா நடிகைகளின் பல படங்களை சொல்லலாம். அதில் முக்கியமா வெப் சீரியஸுலயும் பலர் ஹிட் கொடுத்துட்டு இருக்காங்க.
அந்த வகையில் த்ரிஷாவும் இதுபோன்று நடித்த நாயகி, பரமபதம் விளையாட்டு போன்ற படங்கள் நடித்திருந்தாங்க. அந்த படங்களெல்லாம் சரியாக போகாத நிலையில் தற்போது மீண்டும் ஏஆர்.முருகதாஸ் கதையில், எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் திரிஷா நடித்த ராங்கி திரைப்படம் வெளியாகியுள்ளது.
96, பொன்னியின் செல்வன் படத்தில் பலரையும் கவர்ந்த திரிஷா இதுபோன்று தனியாக நடிக்கும் படங்கள் பெரிதளவில் ஹிட் ஆகவில்லை. இன்று வெளியான திரிஷாவோட ராங்கி ஹிட் அடிக்குமா என்று தஞ்சாவூர் ரசிகர்கள் கிட்ட கேட்கலாம்.
கதையின் கரு :
நடிகை திரிஷா தையல் நாயகி கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக நடித்துள்ளார். போலி ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தி ஆண்களுடன் நெருக்கமாக பேசி வருகிறார் ஒரு பெண். அந்த போலி கணக்கின் ப்ரொஃபைல் பிக்சரில் த்ரிஷாவின் அண்ணன் மகளின் புகைப்படம் வைக்கப்படுகிறது.
அந்த பெண் பேசி வந்த ஆண்களில் ஒருவன் வெளிநாட்டு தீவிரவாதி. இந்த விஷயம் நாயகி திரிஷாவின் பார்வைக்கு வர, அண்ணன் மகள் சுஸ்மிதாவை பிரச்சனையில் இருந்து மீட்க தீவிரவாதியுடன் சாட் செய்ய தொடங்குகிறார். அப்போது ஏற்படும் திருப்பங்களின் தொகுப்பே ராங்கி திரைப்படத்தின் கதை.
ரசிகர்களின் கருத்து :
இன்று தஞ்சையில் மிக குறைவானர்களே ராங்கி திரைப்படம் பார்த்த நிலையில் படத்தை பார்த்த பலர் படம் ஒருமுறை பார்க்கலாம். திரிஷாவின் நடிப்பு சூப்பராக இருக்கிறது என்றும், ஒரு சிலர் படம் குப்பை படம் என்றும் கதை சரியில்லை என்றும் இந்த படத்தை பார்க்காமல் இருக்கலாம் என்றும் விமர்சித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நாயகி, பரமபதம் விளையாட்டு போன்ற திரைப்படத்தின் வரிசையில் இந்த படமும் இடம் பெற்றுவிடுமா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்தியாளர் : ஆனந்த் - தஞ்சை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Trisha, Local News, Tamil Cinema, Tanjore