Home /thanjavur /

தஞ்சாவூரில் காலி தீவன சாக்கு பைகள் ஏலம்- நடைமுறைகள் இதுதான்

தஞ்சாவூரில் காலி தீவன சாக்கு பைகள் ஏலம்- நடைமுறைகள் இதுதான்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஒரத்தநாட்டில் காலி தீவன பாலிதீன் பைகள் ஏலம் விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Orathanadu (Mukthambalpuram), India
    தஞ்சாவூர் அடுத்த நடுவூர் மாவட்ட கால்நடைப் பண்ணையில் 2021-2022 ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட 5,294 எண்ணிக்கையிலான காலி தீவன பாலித்தீன் சாக்கு பைகள் வருகிற 23ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் பொது ஏலம் நடக்கிறது.

    5,294 சாக்கு பைகளில் நல்ல நிலையில் உள்ள சாக்குகளின் எண்ணிக்கை 4,796, கிழிந்த நிலையில் உள்ள சாக்குகள் எண்ணிக்கை 496 ஆகும்.

    அரசு விதிமுறைகள் படி பகிரங்கமாக அலுவலக வளாகத்தில் ஏலம் நடத்தப்படும். ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள், சாக்கு கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், கடைகள் தனி தனியாக ஏலத்திற்கான முன்வைப்புத்தொகை 1,000 ரூபாய் மட்டும் The deputy director of Animal husbandry farm, Naduvur என்ற பெயரில் வங்கி வரைவோலை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஒரத்தநாடு கிளையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையை சமர்பிக்க வேண்டும்.

    வங்கி வரைவோலையில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட்டு அந்த நபர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முன் வைப்புத் தொகையாக செலுத்தப்படும் வங்கி வரைவோலைகள் அனைத்தும் 16-8-22 முதல் 22-8-22 வரை பெறப்பட்ட வங்கி வரைவோலையாக இருக்க வேண்டும்.

    துணை இயக்குனர் அலுவலகத்தில் 22-ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கி வரைவோலை பெறப்படும். காவல்துறை உதவியுடன் ஏலம் நடத்தப்படும். ஏலம் முடிந்தவுடன் அதிக தொகைக்கு ஏலம் கோரியவரை தவிர இதர ஏலதாரர்களுக்கு வரைவோலை திருப்பி வழங்கப்படும்.

    ஏலம் முடிந்தவுடன் ஏலத்தொகை மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி தொகை முழுவதையும் ஏலதாரர் உடனே செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறும் பட்சத்தில் அவர் செலுத்திய முன் வைப்பு தொகை முழுவதும் இழக்க நேரிடும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏலத்தில் பங்கு பெற அனுமதி இல்லை.

    ஏலம் விடப்படும் சாக்கு பைகளை உரிய அனுமதி பெற்று பார்வையிடலாம். ஏலம் கேட்பு செய்யப்பட்ட தொகையானது அரசு நிர்ணயித்த விலையை காட்டிலும் குறைவாக இருந்தாலோ அல்லது நிர்வாக காரணங்களால் தடைபட்டாலோ அல்லது இயற்கை இடர்பாடுகளினால் காலதாமதம் ஏற்பட்டாலோ இந்நிகழ்வினை தள்ளி வைக்கவும், ரத்து செய்யவும் அலுவலருக்கு முழு அதிகாரம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி