முகப்பு /தஞ்சாவூர் /

“எங்களை தாக்க கூடாது, நிம்மதியா தொழில் பண்ணவிடுங்க..” தஞ்சையில் ஓட்டுநர் சங்கத்தினர் அறவழி போராட்டம்..

“எங்களை தாக்க கூடாது, நிம்மதியா தொழில் பண்ணவிடுங்க..” தஞ்சையில் ஓட்டுநர் சங்கத்தினர் அறவழி போராட்டம்..

X
தஞ்சையில்

தஞ்சையில் ஓட்டுநர் சங்கத்தினர் அறவழி போராட்டம்

Drivers Union Protest In Tanjore : தஞ்சாவூரில் ஓட்டுநர் சங்கத்தினர் அறவழிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Thanjavur, India

இந்தியாவில் இனி எந்த ஒரு ஓட்டுநர்களையும் அரசு அதிகாரிகள் மற்றும் சமூக விரோதிகளால் தாக்கப்பட கூடாது என்று

தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து அறவழி போராட்டத்தை நடத்தினர்.

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்தில்

அப்போதுஅப்போது ஓட்டுனர் மீது கொலைவெறி தாக்குதலை நடத்திய குவாலியர் ஆர்.டிஓ- வை கைது செய்ய வேண்டும், வாகனத்தை வழிமறித்து லஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழி போராட்டத்தை நடத்தினர்.

தஞ்சையில் ஓட்டுநர் சங்கத்தினர் அறவழி போராட்டம்

இதுகுறித்து ஓட்டுனர்கள் கூறியதாவது, “ஓட்டுனர் மீது கொலைவெறி தாக்குதலை நடத்திய குவாலியர் ஆர்.டிஓ- வை கைது செய்ய வேண்டும்,ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டு வருகிறது. லஞ்சத்தின் உச்சமாய் இருக்கும் சோதனை சாவடிகளில் நாங்கள் படும் பாடு, ஒன்றல்ல இரண்டல்ல இரவு முழுவதும் கண்விழித்து வாகனம் ஓட்டும் எங்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அத்திபள்ளி சோதனைச் சாவடியை அகற்ற வேண்டும், எங்களுக்கான காப்பீடு திட்டத்தை ஓட்டுநர் உரிமம் பெறும்போதே இனைத்து தர வேண்டும், மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுநர் மற்றும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், லஞ்சத்தை தடை செய்ய வேண்டும், வாகனத்தை வழிமறித்து லஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில் தமிழ் நாடு தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை ரயில்வே நிலையம் அருகே நடந்த இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து காவல்துறையினர் மாற்று பாதை வசதியை ஏற்படுத்தினர்.

    First published:

    Tags: Local News, Thanjavur