தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டத்திலேயே முதன்மை மாவட்டமாக திகழ்சிறது தஞ்சாவூர். இந்த மாவட்டத்தில் 70 சதவீத மக்கள் விவசாய தொழிலிலும், அது தொடா்புடைய வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 3.39 லட்சம் ஹெக்டோில், சுமாா் 2.69 லட்சம் ஹெக்டோில் விவசாய பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில், சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற உதவும் வழிமுறைகள் குறித்த விவரங்களை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது: ஏ.டி.டி. 51 நெல் ரகமானது விவசாயிகள் மத்தியில் அதிகமாக பயிரிடக்கூடிய சம்பா நெல் ரகமாகும். வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களின் மூலம் ஏ.டி.டி. 51 நெல் ரகமானது வினியோகம் செய்யப்பட்டு விவசாயிகளால் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இப்படியெல்லாம் கட்டாயப்படுத்த கூடாது..! - தஞ்சாவூர் விவசாயிகள் கோரிக்கை..!
இந்த ரகமானது அதிக விளைச்சல் தரக்கூடிய ஒன்றாகும். ஆனால் உயரமாக வளரக்கூடிய ஒன்றாக உள்ளதால் அறுவடை காலங்களில் சாயும் தன்மை பெற்றதாக உள்ளது. இந்த தன்மையை நிவர்த்தி செய்ய தழைச்சத்து உரத்தை நான்கு சம பாகங்களாக பிரித்து அளிக்க வேண்டும்.
தழைச்சத்து நிறைந்த யூரியாவினை ஒரு ஏக்கருக்கு 130 கிலோ என்ற அளவில் கடைசி உழவின்போதும், தூர்கட்டும் பருவத்தின்போதும், கதிர் உருவாகும் பருவத்திலும் மற்றும் கதிர் வெளிவரும் தருணங்களிலும் சம பாகங்களாக பிரித்து இட வேண்டும். தூர் கட்டும்பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்கள் மிகவும் முக்கியமான பயிர் வளர்ச்சியில் காலங்களாகும்.
இதையும் படிங்க : 247 தமிழ் எழுத்துக்களால் சிவனுக்கு எழுப்பப்பட்டதா தஞ்சை பெரிய கோவில்..? ஆச்சரியப்படவைக்கும் ராஜராஜ சோழனின் தமிழ் பற்று பற்றிய கதைகள்...
இந்த தருணத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவு முறை குறையாமல் உரம் இடப்படுதல் மிக முக்கியமான ஒன்றாகும். தழைச்சத்து உரம் அதிகமாக இடும்போது வளர்ச்சியானது அதிகரித்து பயிரானது உயரமாக காணப்படும்.
எனவே இலைவண்ண அட்டையை பயன்படுத்தி தழைச்சத்து உரத்தினை பயிர்களுக்கு உரிய அளவில் இடுதல் வேண்டும். மணிச்சத்து தரக்கூடிய சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்டினை அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 125 கிலோ என்ற அளவில் இட வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
சாம்பல் சத்து நிறைந்த மூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்தினை ஒரு ஏக்கருக்கு இருமுறை 17 கிலோ என்ற அளவில் பூக்கும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இட வேண்டும். இவ்வாறு சரியான உர மேலாண்மை மேற்கொண்டு கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Farmers, Local News, Tanjore