முகப்பு /தஞ்சாவூர் /

குழந்தைகளை சாப்பிட வைக்க மொபைல் கொடுக்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை கண்டிப்பா கவனிங்க!

குழந்தைகளை சாப்பிட வைக்க மொபைல் கொடுக்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை கண்டிப்பா கவனிங்க!

X
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மனநல ஆலோசகர்

Mobile Addiction for Childrens| மொபைல் போனால் வழிமாறும் குழந்தைகளின்  மனநிலையை கண்டறிவது எப்படி என்பது குறித்து மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தற்போது இருக்கும் காலகட்டத்தில் மொபைல் போன் என்பது அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது..கடந்த பத்து ஆண்டுகளில் இந்த மொபைல் போனின் தாக்கம் அதிகரித்து வருகிறது இதனால் மனிதனுக்கு பல்வேறு வகையான பயன்கள் இருக்கிறது இருந்தாலும் ஒரு சிலரின் தவறான செயல்களால் மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதிலும் இந்த மொபைல் போன் முக்கிய காரணமாகவும் மாறுகிறது..

முதன் முதலாக குழந்தைகளுக்கு சாப்பிட வைப்பதற்காக காட்டப்படும் செல்போன் அதுவே தொடர்ந்து ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எமனாகவும் மாறுகிறது அதற்கு பல சான்றுகளும் நிகழ்ந்து இருக்கிறது... குழந்தைகள் மொபைல் போனை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், இதனால் அவர்களுக்கு உடலளவில் மன அளவில் ஏற்படும் மாற்றங்கள் அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து தஞ்சை மகிழ்ச்சி மனநல மருத்துவர் கூறியதை பின்வருமாறு காணலாம்:

மொபைல் போன் கொடுப்பது சரியா?..

மொபைல் போன் கொடுப்பது தவறு என்று சொல்ல முடியாது, ஏனென்றால் தற்போது மொபைல் போன் பயண்படுத்தும் சூழல் ஏற்படுகிறது.. உதாரணத்திற்கு கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி நன்மையா?.. தீமையா?.. என்ற தலைப்புகளில் கேள்விகள் எழுந்தது..

அப்போதைய டெக்னாலஜி அது இப்போது டெக்னாலஜியில் பல பரிமாணங்களை கடந்து ஸ்மார்ட் போன் என்ற சக்தி வாய்ந்த டெக்னாலஜி அனைவரையும் உரசி பார்க்க தான் செய்யும், குழந்தைகள் ஸ்மார்ட்போன், டேப் என்ற சாதனங்கள் மூலம் கேமிங் வீடியோஸ் போன்றவற்றை பயண்படுத்துகின்றனர். டெக்னாலஜி வளர வளர நாம் அதை பயன்படுத்த வேண்டிய சூழலும் ஏற்படுகிறது நாம் அதை பின்னோக்கியும் செல்ல முடியாது..

மொபைல் போனை கொடுக்கவே மாட்டேன் என்று எல்லாம் சொல்வது சாத்தியம் இல்லை என்றாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொபைலில் அதிக நேரம் செலவிடுவதை லிமிட் செய்யலாம், இதுவே இதற்கு பதிலாக இருக்கிறது...

மனம் மற்றும் உடல் நலம் சார்ந்த பாதிப்புகள்::-

குழந்தைகள் மொபைல் ஸ்க்ரீனை அதிக அளவில் பார்ப்பதன் மூலம் கருவிழி சோர்வடைந்து விடுகிறது. அதையே தொடர்ந்து பார்க்கும் பொழுது அந்த ஸ்கிரீனிலிருந்து வரும் சக்தி வாய்ந்த ஒளி கண் வலி மற்றும் பார்வை திறன் குறைபாடுகளை ஏற்படுத்தும்... ஒரு குழந்தை படுத்துக் கொண்டோ உட்கார்ந்து கொண்டு தலையை உடலை அசைக்காமல் மொபைல் ஃபோனை மட்டும் கவனித்து பார்க்கும்போது கழுத்து வலி கைகளில் வலி இது போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் நேரிடலாம்.

குழந்தை மொபைல் போனை அதிகமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மனிதர்களிடம் பழகுவது பேசுவது எப்படி என்று கூட தெரியாமல் போய்விடும் ஒரு சாதாரண வாழ்க்கையை அக்குழந்தை வாழ சிரமப்படும். சிரித்து விளையாடி மனமகிழ்ந்து ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டும் இது தற்போது இருக்கும் குழந்தைகளிடம் மிக குறைவாகவே இருக்கிறது..

ஹெட்போனில் கேமிங் விளையாடும் ஒரு குழந்தை அல்லது பள்ளி படிக்கும் குழந்தைகள் அதிக இரைச்சல் சத்தத்துடன் தொடர்ந்து கேட்டு அந்த உலகத்திற்கே சென்று வேறு மாதிரியான மனநிலையை ஏற்படுத்தும்.. மேலும் காதுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

ரியல் லைஃப் விளையாட்டுகளை விட்டு ரீல் லைப் விளையாட்டுகளில் மூழ்கி போகும் இது போன்ற குழந்தைகள் லிமிட்டை தாண்டி செல்லும்போது அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறியாகவே மாறிவிடும் சமுதாயத்தில் ஒரு சரியான குழந்தையாக தோன்றாது.

எந்தெந்த வகைகளில் லிமிட் செய்யலாம்:

ஒரு வகையான கன்டென்டுகளை தொடர்ந்து பார்க்கின்றனர் என்றால் உதாரணத்திற்கு ஒரு டியூபரின் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கின்றனர் என்றால் எந்த யூடியூபர் குழந்தைகளுக்கு ஏற்ற காட்சிகளையும் வார்த்தைகளையும் பயண்படுத்துகிறாரா என்பதை கவனிக்க வேண்டும்... அவர்கள் என்ன கன்டென்ட் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..

மொபைல் கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என்று பல குழந்தைகள் அடம் பிடிக்கும் போது சாப்பிடாவிட்டால் போ போன் தர மாட்டேன் என்று பெற்றோர்கள் கடுமையாக சொல்ல வேண்டும் கண்டிக்க வேண்டும்.. பள்ளி படிக்கும் குழந்தைகள் செல்போனில் ஓவர் அடிக்ஷனாக இருப்பதன் முக்கிய காரணம் பெற்றோர்களை விட்டு தனியே சென்று மொபைல் போனை பார்ப்பது ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

அவர்கள் என்ன கண்டன்டுகளை பார்க்கின்றனர் என்பதையும் பெற்றோர்கள் ஆராய வேண்டும் பக்கத்தில் உட்கார்ந்து செல்போனை பயன்படுத்து எதற்கு தனியாக செல்கிறாய் இதுபோன்ற கவனிப்புகளையும் குழந்தைகளிடம் காட்ட வேண்டும்... ஒரு சில பெற்றோர்கள் இதனை கடைபிடித்து வந்தாலும் பல பெற்றோர்கள் இதனை (அதாவது செல்லம் குடுப்பதாக நினைத்து) கண்டுகொள்வதில்லை... இந்த டெக்னாலஜி குழந்தைகளின் வாழ்க்கையை வழி நடத்த ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.. என்று மன நல மருத்துவர் ஐஸ்வர்யா அருண்குமார் கூறினார்..

பல பெற்றோர்கள் ஆளுக்கு ஒரு மொபைல் குழந்தைக்கும் ஒரு மொபைலை கொடுத்து தனியாக உட்கார்ந்து இஷ்டப்படி யாரிடமும் பேசாமல் மொபைலை மட்டும் பார்த்து வாழ்க்கையை கடந்து போகும் பல குடும்பங்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.. இது போன்று இருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களையும் திருத்திக் கொண்டு தங்கள் குழந்தையை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே இச்செய்தியின் முக்கிய நோக்கம்.. ..

First published:

Tags: Health, Local News, Phone addiction, Thanjavur