Home /thanjavur /

இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தஞ்சாவூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தஞ்சாவூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தஞ்சாவூரில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சாவூரில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை ( 26ம் தேதி) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூரில் நாளை (வெள்ளிக்கிழமை) வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றனர். இந்த முகாம் காலை 10.00 மணிக்கு துவங்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளார்.

    இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் வேலை தேடுவோர்களை கண்டறிந்து, வேலையில் உள்ள காலிப்பணியிடத்தை தனியார் துறையினர் நிரம்புகின்றனர். வேலை தேடும் நபா்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் பங்கேற்கலாம்.

    வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    இந்த முகாமில், எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல், முதுநிலை பட்டதாரிகள் வரையிலும், ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்களும் கலந்து கொண்டு
    பயன்பெறலாம்.

    இந்த முகாமில், பங்கேற்கும்போது வேலைவாய்ப்பு பதிவில் குறைகள் இருந்தால் அதனை சரிசெய்து கொள்வதுடன், கூடுதல் கல்வியையும் பதிவு செய்து கொள்ளலாம். 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    தனியாா் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்தப் பணி முற்றிலும் இலவசமானதாகும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04362 -237037 என்ற எண்ணில்
    தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Thanjavur

    அடுத்த செய்தி