முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை பெரிய கோயிலில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் தீவிரம்..

தஞ்சை பெரிய கோயிலில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் தீவிரம்..

X
சிவராத்திரிக்கு

சிவராத்திரிக்கு தயாராகும் தஞ்சை பெரிய கோயில்

Thanjavur Periya Kovil : தஞ்சை பெரிய கோயிலில் சிவராத்திரி விழா முன்னேற்றம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தஞ்சையில் அதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசு அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் இந்த சிவராத்திரி விழாவில் மங்கல இசை, திருமுறை விண்ணப்பம், கயிலாய வாத்தியம், தெருக்கூத்து, நாத சங்கமம், பக்தி இசை, பட்டிமன்றம், பறை இசை, பரதநாட்டியம், குச்சிப்புடி, காவடி, கரகாட்டம், நையாண்டி மேளம், சிவன் சக்தி நாடகம், பக்தி இசை பாடல்கள் போன்ற பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இதற்கான முன்னேற்பாடுகள் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மேற்பார்வையில் தஞ்சை திலகர் திடலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், மத்திய அரசின் கலாச்சார அமைப்பான தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையம், சிவராத்திரி அன்று கலை விழாக்களை நடத்த உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, புதுச்சேரி, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் உள்ள கலைகளை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசால் தஞ்சாவூரில், தென்னக பண்பாட்டு மையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு சார்பில் இந்தாண்டு சிவராத்திரியன்று, தஞ்சையைச் சுற்றியுள்ள சிவாலயங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தஞ்சை பெரிய கோயிலில் வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கதகளி, குச்சிப்புடி உள்ளிட்ட தென்மாநில பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மயிலாடுதுறை மயூரநாதர், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட கோயில்களில், கலைஞர்களை ஏற்பாடு செய்து, கோயில் நிர்வாகத்துடன் இணைந்து, கலை நிகழ்ச்சிகள் நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: Local News, Thanjavur