முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை கோனூர் நாடு அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!

தஞ்சை கோனூர் நாடு அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!

X
பிரதோஷம்

பிரதோஷம்

Thanjavur Pradosam | தீராத மனக்கவலையை தீர்க்கும் தஞ்சை மாவட்டம் கோனூர் அகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் கோனகர் நாடு அகத்தீஸ்வரர் கோவிலில் ஏப்ரல் மாத முதல் பிரதோஷம் நடைபெற்றது.அகத்திய மாமுனிவர் வழிபட்ட திருத்தலங்களில் இந்த கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவிலும்ஒன்று என்று சொல்லப்படுகிறது.இக்கோயில் ‘தீராத மனக்கவலை தீர்க்கும்’ என்பதுபக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

பிரதோஷ வழிபாடு:

தலத்தில் உள்ள அம்பாள் மற்றும் பைரவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிவன் பெரிய நாயகி அம்பாள் சன்னதியில் ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

பிறகு நந்தியம்பெருமானுக்கு தைலாபிஷேகம், திரவியம் பொடி, மஞ்சள் பொடி,மாப்பொடி, நெல்லிப்பொடி வில்வபொடி, அதிமதுரப்பொடி, பால், பஞ்சாமிர்தம், தயிர், நெய், தேன், எலுமிச்சை பழம் சாறு, இளநீர், சந்தனம், விபூதி, அனைத்து விதமான மூலிகைகள் கொண்டும் நந்தியம்பெருமானுக்கு பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த பிரதோஷ வழிபாடு நிகழ்வில், சொந்தகிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ‌‌ ‌

First published:

Tags: Local News, Thanjavur