தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கரம்பயம், வடசேரி திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21-01-2023) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்தடை பகுதிகள்:
பட்டுக்கோட்டை எஸ்.பி.எஸ் நகர், மன்னைநகர், வளவன் புரம், மதுக்கூர்ரோடு, கண்டியன் தெரு, மயில்பாளையம், தாலுகா ஆபிஸ், வீட்டு வசதி வாரியம், சின்னையா தெரு, கோர்ட், ஹைஸ்கூல் ரோடு, பழனியப்பன் தெரு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கரிக்காடு எஸ்.எம். எஸ் அவென்யூ, சுண்ணாம்புக் காரத்தெரு, செட்டி தெரு, போஸ்ட் ஆபீஸ், பெரிய கடைத் தெரு, பெரிய தெரு, சாமு முதலித் தெரு, ஆஸ்பத்திரி ரோடு, ஆர்.வி. நகர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர், நாடியம்மன் கோவில் ரோடு,
சிவகொல்லை, தங்கவேல் நகர், ஏ.வி.குளத்தெரு, சவுக்கண்டி தெரு, திரவுபதைஅம்மன் கோவில் தெரு, தேரடி தெரு, தலையாரி தெரு, கே. ஓ.என். பாளையம், மாதா கோவில் தெரு, பண்ணவயல் ரோடு, அணைக்காடு, பொன்னவராயன் கோட்டை, முதல் சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, பள்ளிகொண்டான், துவரங்குறிச்சி, மன்னங்காடு, மழவேனிற்காடு, வெண்டாக்கோட்டை, பழஞ்சூர் பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல, பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட நகர்- 1 (கீழப்பாளையம், செம்பரான் குளம், எம்.என்.தோட்டம்) நகர்- 2 (மேலத்தெரு, லட்சத்தோப்பு, நியூ ஹவுஸ் யூனிட்) அதம்பை, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், வீரக்குறிச்சி, குறிச்சி மற்றும் பாளமுத்தி ஆகிய பகுதிகளுக்கும் கரம்பயம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம் கிளாமங்களம் பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
வடசேரி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, தொண்டராம்பட்டு, நெம்மேலி, அண்டமி, ஓலையக்குன்னம், வளையக்காடு, மண்டபம், மகாதேவபுரம், கண்ணுகுடி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.
Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? நெல்லை அரசு மருத்துவர் விளக்கம்
இதேபோல, திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி, தில்லைஸ்தானதம் பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களுர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur