முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க! 

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க! 

மின்தடை

மின்தடை

Thanjavur district | தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.02.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

ஒரத்தநாடு பகுயில் உள்ள ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறக்கூடிய ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி,

21 தலைமுறை பாவங்களையும் போக்கும் தீர்த்தம்.. திருச்சி எறும்பீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்..

உஞ்சிய விடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர் குடிகாடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur