முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்ட மக்களே உஷார்... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட மக்களே உஷார்... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் துணை மின் நிலையத்தில் நாளை (21.02.2023) பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால், இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று மின்வரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

தாராசுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள்கோவில், சோழன் மாளிகை, முழையூர் திருவலஞ்சுழி, அம்மாப்பேட்டை, புதுப்படையூர், மணப்படையூர் தென்னூர், பம்பப்படையூர், கீழப் பழையாறை, தேனாம்படுகை, உடையாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : குற்றாலத்தில் குளிக்க போறீங்களா - எந்தெந்த அருவிகளில் தண்ணீர் விழுகிறது... தெரிந்து கொள்ளுங்கள்!

இதைப்போல, முள்ளுகுடி மற்றும் குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் குறிச்சி, கீழக்காட்டூர், காகிதப்பட்டறை, பந்தநல்லூர், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி புழுதிக்குடி, நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமணக்குடி, கயலூர், திருக்கோடிக்காவல், குணதலைப்பாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur