முகப்பு /தஞ்சாவூர் /

உஷார்... தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை

உஷார்... தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை

மின் தடை 

மின் தடை 

Thanjavur district | தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம், ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (31-01-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் கடந்த 27ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் அன்று பணிகள் நடைபெறவில்லை. அந்த பணிகள் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாாிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

ஊரணிபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சிய விடுதி, காரியாவிடுதி,

Must Read : சிலிர்ப்பூட்டும் சின்னக் கல்லாறு அருவி... ஒரு என்ஜாய் ட்ரிப் போகலாம்!

கலியரான்விடுதி, சிவவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிகாடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur