ஹோம் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது - முன்னேற்பாடுகளை செஞ்சிக்கோங்க

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது - முன்னேற்பாடுகளை செஞ்சிக்கோங்க

மின் தடை 

மின் தடை 

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (25-01-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என சாலியமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள்:

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லித்தோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, எடவாக்குடி,

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

யாகப்பாசாவடி, அம்மாகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் தடை தொடர்பான தகவல்களுக்கு 9898794987 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயன் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

இதேபோல வல்லம், சென்னம்பட்டி மற்றும் மின் நகர் ஆகிய பகுதிகளில் உயர் மின் அழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் தடை செய்யப்படும் என்று தஞ்சாவூர் உதவி செயற்பொறியாளர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur